Friday, September 2, 2016

மனுசி - ஈரோடு தமிழன்பன்

முன்னுரை:

ஈரோடு தமிழன்பன் மரபும் புதுமையும் கலந்து எழுதும் வல்லமை கொண்டவர். சிறந்த படைப்புகளைத் தரும் பன்முகப் படைப்பாளி. இவரின் மனுசிகவிதை பெண்ணின் உலகம் பற்றி பேசுகின்றது. பெண்ணின் மீதான உலகத்தின் பார்வையைப் பேசுகின்றது. பெண்ணை பெண்ணாய் மட்டும் பார்க்க வேண்டும் என்கிறது.
மனுசியை வாழ வைப்போம்:
பெண் பற்றிய பொய்மையான கவிதைகளை எல்லாம் உறங்கவிடுவோம். கற்பனைகளை எல்லாம் வெளி ஊருக்கு அனுப்புவோம். பெண்மையை பெண்மையாய் மட்டும் பார்த்து நாம் உண்மைகள் பேசிட வேண்டும். இதுவரை நாம் பெண்ணை மானென்றும்ää மயிலென்றும் புகழ்ந்து பாடியது போதும். கடவுளின் படைப்பில் மனிதன் என்பது போல் மனுசியும் ஓர் படைப்புதான். ஆகவே அவளை ஒரு மனுசியாக வாழ வைப்பது மட்டுமே போதுமான ஒன்றாகும்.

ஆண் பெண் பேதம் வேண்டாம்:

பெண் என்பவள் பாவத்தின் சின்னம்ää பலம் இல்லாதவள்ää எதையும் சாதிக்க முடியாதவள் என்று பழைமையான புராணத்தைப் பாடித்திரிய வேண்டாம். ஒரு மனுசியால் முடியாத காரியம் என்று எதுவுமில்லை. ஒரு மனிதனுக்கு நிகராக ஒரு மனுசியும் அணுகப்பட வேண்டும். ஆண் பெண் என்ற வேறுபாடு இனி வேண்டாம் என்று நீதியின் காதிலே போய் சொல்வோம். அதுவே நாம் பெண்ணிற்குச் செய்யும் சிறப்பாகும்.
                                “நீதியின் காதிலே சொல்வோம் - இனி
                                 நிச்சயம் பேதங்கள் வேண்டாம்

உலகம் போற்றாத பெண்மை:

இந்த உலகில் பெண்ணானவள் ஒரு தாயாய்ää தாராமாய்ää குழந்தையாய் என்று பல்வேறு பாத்திரங்களை எடுக்கிறாள். இருந்தபோதும் அவளின் வாழ்நாள் முழுதும் உரிமைகளை இழந்து ஆண்களுக்காக தேய்ந்தும்ää தீர்ந்தும்ää மாய்ந்தும் போய்விடுகின்றது. ஒரு சிறந்த பெண்மணியாய் உருவெடுக்க இந்த உலகம் அவளை எந்நாளும் விடுவதில்லை என்பதே உண்மைநிலை.
                                “எத்தனை பாத்திரம் ஆனாள்?
                                 ஏனவள் வாழாமல் போனாள்?

வாழப்பிறந்த பெண்மை:

பெண் என்பவள் யாருக்கும் பாரமாக வரவில்லை. யாரிடமும் யாசித்துக் கெஞ்சி வாழ வேண்டிய அவசியமுமில்லை. அவள் இந்த உலகத்தில் வாழ்வதற்காகப் பிறந்தவள். அவள் வாழ்வதோடு இந்த உலகத்தையும் வாழச்செய்பவள். பெண் என்பவள் ஏழைப் பிறப்பல்ல. அவள் எதற்காகவும் அஞ்ச வேண்டிய கட்டாயமில்லை.

பெண்மையின் சிறப்பு:

பெண் என்பவள் சந்ததியின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருப்பவள். அவளை ஓர் உற்பத்திப் பொருளாகவே இந்த உலகம் பார்க்கின்றது. பெண்ணை தேவதை நிலைக்கு உயர்த்திப் பிடிக்கவும் வேண்டாம். அதேசமயம் தீயிலிட்டுப் பொசுக்கும் கீழ்நிலைக்குத் தள்ளவும் வேண்டாம். ஒரு மனிதனை முழுமையாக்குவதும்ää ஒரு மனிதனால் முழுமையாவதும் பெண்ணால் மட்டுமே முடியும். ஆகவே அவளின் உழைப்பை மதிப்போம். உற்பத்தி வல்லமையை நினைத்துப் பார்ப்போம். அப்போதே பெண்மை சிறப்புறும்.

முடிவுரை:

பெண் மீதான உலகத்தின் பார்வை போலியானது. அதனை மாற்றிக் கொண்டு பெண்ணை பெண்ணாய் மட்டும் பார்க்கவேண்டும் என்பதை மனுசி கவிதை நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. பெண்ணிற்கான சிறப்பை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதே ஈரோடு தமிழனன்பனின் குரலாக இக்கவிதையில் ஒலிக்கின்றது.

No comments:

Post a Comment