Friday, September 2, 2016

நம்பிக்கையுடன் - பா.விஜய்

          அருவி மலையின் மீது காட்டாறாக உருவாகி, மலை முகட்டிலிருந்து அருவியாக விழுகிறது. பின்பு நதியாக எழுந்து பாய்கிறது. அதைப் போல் நாமும் வாழ்வில் நேரும் வீழ்ச்சியில் முடங்கிவிடாமல், மீண்டும் வெல்வதற்கு முற்பட வேண்டும்.
   திட்டமிடாமல் செய்யும் எந்த ஒரு செயலும் வெற்றியைத் தேடித் தருவதில்லை. திட்டமிடாத உழைப்பு பாலைவனத்தில் ஆழ்குழாய் திட்டமாகப் பயனற்றுப் போகும்.
  எந்த ஒரு செயலையும் ‘முடியும்’ என்று எண்ணித் தொடங்க வேண்டும்;. முடியுமா என எண்ணுவது நம்மை பலவீனப்படுத்திவிடும்.
  நீண்ட நேர உறக்கம் வெற்றி பெற விடாமல் இறக்கத்தையே தரும்.
  வெற்றி பெற காலம் தவறாமை இன்றியமையாதது.
  ஒரு செயலைச் செய்யும் முன் யோசனை செய்து தொடங்க வேண்டும். ஆனால் யோசித்து யோசித்தே திட்டங்களுக்குச் செயல் வடிவம் தராமல் கிடப்பில் போடக்கூடாது.
  உழைத்து வாழ வேண்டும். மேகம் கூட உருகினால் தான் மழையாகப் பயன் தரும். உழைக்க தயங்கக்கூடாது.
  பிறர் தயவில் வாழ்வதை விடுத்து, நாம் பலரை வாழ்விக்க வேண்டும்.
  வாழ்வில் அடையும் காயங்களை இதயத்தில் பாதுகாக்க வேண்டும். அவையே நம்மை இயக்கி சாதனையாளராக மாற்றும்.
  முட்களைக் கடந்தால்; செடியில் அழகிய பூக்கள் இருப்பதைப் போல்ää முயற்சித்து முயற்சித்துத் தோற்றவனுக்கே வெற்றி கிட்டும்.
   நம்முள் இருக்கும் ஆற்றல் நெருப்பு போன்றது. நமக்கு நேரும் இடர்களோ இலவம் பஞ்சு போன்றது. அவற்றால் நமக்கு பாதிப்புகள் இல்லை.
   நம்முடைய கோபமே நம்மைக் காக்கும் நெருப்புப் பந்து. உணர்ச்சிகளை ஒருபோதும் முகத்தில் காட்டாமல், வெடிமருந்துக் கிடங்கு போல உள்ளுக்குள் உக்கிரமானவனாக இருக்க வேண்டும். தேவைப்படும் போது மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டும். நம்பிக்கையோடு நடைபோடும் போது வெற்றி நம் வசப்படும்.

No comments:

Post a Comment