மரவியாபாரி ஒருவன் மரத்தின் வேர் முதல் கிளைவரை பார்க்கிறான். அதில் மனிதாபிமானம் மறந்த வியாபாரச் சிந்தனையே மேலிடுகிறது. மேலும் அந்த மரத்தில் சில குருவிகள் கூடுகட்டி வாழ்ந்து வருகின்றன. அதையும் வியாபார நோக்கத்துடனேயே பார்க்கிறான். நம்முடைய சுயநலப் போக்கால் மரங்கள் அழிக்கப்படுவதைக் கவிஞர் அறிவுமதி இக்கவிதையில் பதிவு செய்துள்ளார்.
போர்க்களத்தில் இராணுவ வீரன் நாட்டுக்காகத் தன் இன்னுயிரைத் தியாகம் செய்கிறான். அவன் போர்க்களத்திற்குச் செல்லும் முன்பு தன் மனைவிக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறான். பாதிக் கடிதம் எழுதிய நிலையில் போர்க்களம் சென்றவன் இறந்துவிடுகிறான். இராணுவ வீரனின் வரவை எதிர்ப்பார்த்திருந்த அவனின் மனைவிக்கு அவன் இறந்த செய்தியே கிடைக்கிறது. அவனால் எழுதி முடிக்கப்படாத கடிதம் கிடைக்கிறது. ஆனால் போர்க்களத்தில் இறந்த வீரனின் உடல்கூட அவனின் மனைவிக்குக் கிடைக்கவில்லை. நாட்டு மக்களைக் காப்பதற்காக இராணுவத்தில் உள்ளோர் செய்யும் அளவிடக்கரிய தியாகம் இக்கவிதையில் கவிஞர் அறிவுமதியால் பேசப்பட்டுள்ளது.
பனி பெய்யக் கூடிய காலை வேளையில் நம்மால் பெரிதும் விரும்பப்படாத கருங்காக்கைக் கூட அழகாகத் தெரியும். நம் மனம் அமைதியாக இருக்கும் இதமான சூழலிலும்ää சுற்றுச்சூழல் அமைதியாக இருக்கும் நிலையிலும் நம்மால் விரும்பப்படாதவற்றிலும் உள்ள அழகுணர்வை உணரமுடியும் என்பதைச் சொல்கிறது பாஷோவின் கவிதை.
அரிசி போட்டு வைக்கும் கிண்ணத்தில் அரிசிக்குப் பதிலாக பூக்களை அடுக்கி வைத்து வறுமையை மறைக்கும் நிலையைக் காட்டுகிறது பாஷோவின் கவிதை. இல்லாமையை இல்லாமல் செய்கிறது இக்கவிதை.
இயற்கையின் படைப்பில் மலர் அழகு என வியந்து நோக்கையில்ää அது உதிர்ந்து கீழே விழுகிறது. அந்த செடியைச் சுற்றி உதிர்ந்த மலரைப் போலவே வண்ணத்துப்பூச்சி சுற்றி வருகிறது. மலரைப் போலவே வண்ணத்துப்பூச்சியும் அழகு. இயற்கையின் படைப்பில் அனைத்தும் அழகானதே என்பதை கவிஞர் மோரிடாகியின் கவிதை உணர்த்துகிறது.
இராமாயணக் காலத்தில் கௌதம முனிவர்ää அகலிகை என்னும் தம்பதியினர் வனத்தில் இல்லறம் நடத்தி வந்தனர். அப்போது இந்திரன் அகலிகையைக் கண்டு அவள் அழகின் மீது மோகம் கொள்கிறான். ஏற்ற தருணம் பார்த்து கௌதம முனிவர் வடிவில் தோன்றி அகலிகையை அடைகிறான். இதையறிந்த கௌதம முனிவர் இருவருக்கும் சாபம் தருகிறார். இதில் அகலிகை எந்தத் தவறும் செய்யாத சூழலிலும் கணவனின் சாபப்படி கல்லாக மாறினாள். சாப விமோச்சனமாக இராமபிரானின் கால்பட்டு; மீண்டும் பெண்ணாக மாறினாள். இந்நிகழ்வை மையமாகக் கொண்ட இக்கவிதை இதிகாசக் காலத்தைப் போலவே இன்றும்; பெண்கள் ஆண்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவதைக் கூறுகிறது. “கல்லாக இருந்த தன்னை மிதித்துப் பெண்ணாக மாற்ற வந்த இராமனை நோக்கி அகலிகைää என்னை பெண்ணாக மாற்றாதேää சுற்றிலும் பல இந்திரன் உள்ளனர். பெண்களுடைய கற்பிற்குக் கலியுகத்திலும் பாதுகாப்பில்லை.” என இன்றைய சூழலிலும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு இரையாவதை அகலிகை கூற்றாகக் கவிதை காட்டுகிறது.
அடர்ந்து வளர்ந்த மரங்கள் இருந்த ஒரு காட்டில்ää மரங்கள் வெட்டப்பட்ட பின்பு மரங்களை வெட்டும் கோடரியும்ää மரத்தைத் துளையிட்டு அதில் தன் வசிப்பிடத்தை அமைக்கும் மரங்கொத்தியும் பேசிக் கொண்டிருக்கின்றது. இயற்கையை நாம் தேவைக்கும் அதிகமாக வெட்டி வனங்களை அழித்துவிட்ட சூழலைக் காட்டுகிறது பூஸனின் கவிதை.
வீட்டின் வரவேற்பரையில் ரோஜா. ஆனால் மனிதர்களின் உள்ளங்களில் நல்ல எண்ணங்களுக்குப் பதிலாக கள்ளி போன்ற முட்கள் உள்ளதைக் கூறிச் செல்கிறது அவைநாயகனின் கவிதை.
மனிதர்கள் இன்று பெரும்பாலும் வீட்டில் ஒருவாறும்ää வெளியே செல்லும் போது முகமூடி அணிந்ததைப் போல ஒருவாறும் மாறிக் காணப்படுவதைக் கோடிட்டுக் காட்டுக்கிறது அவைநாயகனின் கவிதை.
Miga arumaiyana kavithaigal!!!
ReplyDeleteSatisfaction
ReplyDeleteNalla kavithai
ReplyDelete