உவமையணி
தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது கூறக்
கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு
பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த
பொருளைச் சொல்லி விளக்குவது.
சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபு படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.
சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ அல்லது பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபு படுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமைப் புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.
தொல்காப்பியம் காட்டும் உவமையணி தொடர்புடைய
கட்டுரையை தொல்காப்பியம்
உவமவியல் செய்திகள் பக்கத்தில் காணலாம்.
12ஆம்
நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் என்னும்
இலக்கண நூல் உவமை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:
"பண்பும்
தொழிலும் பயனும் என்றிவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை" [1]
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள் புணர்த்து
ஒப்புமை தோன்றச் செப்புவது உவமை" [1]
"இழுக்கல்
உடையுழி ஊற்றுகோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்"
சான்று: அகழ்வாரைத்
தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை
இங்கு,
உவமானம்: அகழ்வாரைத் தாங்கும் நிலம்
உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு: போல
உவமேயம்: தம்மை இகழ்வார்ப் பொறுத்தல்
உவமை உருபு: போல
உருவக அணி
உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும்
வேறுபாடு தோன்றாமல் (அதுதான் இது என உறுதிப் படுத்திக் கூறுவது) இரண்டும் ஒன்று
என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவது ஆகும். இது உவமை அணியின் மறுதலை.
விதி:
"உவமையும் பொருளும்
வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்".
எடுத்துக்காட்டு
இதுதான் அது.
அவளின் முகம்தான் சந்திரன்.
·மையோ மாமலையோ மறிகடலோ - இது உருவக அணி
இதில் கண்ணனை மை, மாமலை, மறிகடல் என உருவகிக்கப் படுகிறது. மை போன்ற மேனி என்று சொல்லியிருந்தால்
இது ஒரு உவமையணி. ஆனால் மையோ என்னும் போது அவன்
மேனிதான் மை என்று சொல்லியாயிற்று. இது உருவக அணி.
எடுத்துக் காட்டுகள்
·
உவமை அணி - மதிமுகம் (மதி போன்ற
முகம்)
·
உருவக அணி - முகமதி (முகம்தான் மதி)
·
உவமை அணி - புலி போன்ற வீரன் வந்தான்
·
உருவக அணி - புலி வந்தான்
·
உவமை அணி - மலர்க்கை (மலர் போன்ற கை)
·
உருவக அணி - கைமலர் (கைகள்தான் மலர்)
·
உவமை அணி - வேல்விழி (வேல் போன்ற
விழி)
·
உருவக அணி - விழி வேல் (விழிதான்
வேல்)
தமிழில் ஒப்பிலக்கியம்
ஓர் இலக்கியத்துடன் காலம்,
வகை, உள்ளடக்கம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒருவழியில் தொடர்புடைய வேறு மொழியிலுள்ள
இலக்கியத்தைக் குறிப்பிட்ட ஒப்பிலக்கியக்
கோட்பாட்டின் வழி் செய்யப்படும் ஆராய்ச்சியே ஒப்பிலக்கியம். ‘ஒப்பிலக்கியம்’ என்பத னால் அது ஏதோ ஓர் இலக்கியம் என்று
நினைக்கலாகாது. தாக்கக் கோட்பாடு, வகைமைக் கோட்பாடு, மையக்கருத்துக் கோட்பாடு போன்ற பலவற்றின் அடிப்படையில் இலக்கியங்களை
ஒப்பிட்டு ஆராயலாம். இலக்கியத்தைப் பிற நுண்கலைகளுடன்
அல்லது பிறதுறைகளுடன் ஒப்பிட்டு ஆராய்கின்ற ஆய்வுகளும் ஒப்பிலக்கியம் என்றே சொல்லப்படும்.
“ஒப்பிலக்கியம் என்பது
ஒருபுறம், தனது இலக்கியத்தோடு
தனது நாட்டின் எல்லைக்கு அப்பாலுள்ள
இன்னொரு இலக்கி யத்தை ஒப்பிட்டு ஆராய்தல் என்பதோடு, இலக்கியத்திற்கும், சிற்பம், கட்டிடக்கலை, இசை போன்ற கலைகள், அரசியல், பொருளாதாரம், சமூகவியல் மாதிரியான சமூக அறிவியல்கள், தத்துவம், வரலாறு, இவை போலுள்ள பிற அறிவுத்துறை களுக்குமான
உறவுகளைக் கண்டு ஆராய்வதுமாகும். சுருக்கமாகச்
சொன்னால், ஓர் இலக்கியத்தை
இன்னொரு இலக்கியத்தோடு ஒப்பிடுவதும், இலக்கியத்தை மனித அனுபவத்தின் பிற துறை
களோடு ஒப்பிடுவதும் ஆகும்.” என்று ரிமாக் ஒப்பிலக்கியத்திற்கான
வரையறையைச் சொல்லு கிறார்.
ஒப்பிடுவதன் நோக்கம், ஒன்றின் உயர்வையோ இன்
னொன்றின் தாழ்வையோ சொல்வதற்காக அல்ல.
மாறாக, இலக் கியத்தின்
பொதுத் தன்மைகளையும் முழுமையையும் அறிவதே ஒப்பிலக்கியத்தின்
இலட்சியம். ஏதேனுமொரு புறவயமான முறை யின் வாயிலாக
எல்லா வித்தியாசங்களையும் மாறுபாடுகளை யும் கடந்துசென்று, இலக்கியத்தின் பொதுத்தன்மையைக் காண் பது
தான் ஒப்பிலக்கியத்தின் நோக்கம்.
இன்றைக்கும் ஒப்பிலக்கியம் என்பது ஏதோ இரண்டு இலக்கி யங்களை
ஒப்பிடுவது என்று நினைக்கும்
கல்வித்துறை ஆய் வாளர்கள் உள்ளனர். இதுபற்றி பேராசிரியர் மருதநாயகத்தின் எச்சரிக்கை இங்கே
குறிப்பிடத்தகும்.
“இரண்டு நூல்கள்
ஆங்கில மொழியில் இருக்குமானால் அவை யிரண்டும் இருவேறு பண்பாடுகளைச் சேர்ந்தவையாக
இருந்தால் அவற்றை ஒப்பிடுதல்
ஒப்பிலக்கியமாகும்
என்பர். ஒரு நூலை எழுதியவர் இங்கிலாந்தைச் சார்ந்தவராகவும், மற்றதை எழுதி யவர் அமெரிக்காவையோ வேறு
ஆங்கில மொழியைப் படைப் பிலக்கியத்தில்
கையாளுகின்ற நாட்டையோ சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். பாரதி, பாரதிதாசன் ஆகியோருடைய கவிதை களை
ஒப்பிடுவது திறனாய்வுத் துறையில் அடங்கும்; ஆனால் ஒப்பிலக்கியம் ஆகாது. அவர்களது
நூல்கள் சார்ந்த தமிழ் இலக் கியம் ஒரே
பண்பாட்டின் விளைவாகும். பாரதியையோ,
பாரதிதாச
னையோ ஈழத்தமிழ்க் கவிஞர்
ஒருவரோடு ஒப்பிடுதல் ஒப்பிலக் கியமாக ஏற்றுக் கொள்ளப்படும். இவ்வேற்றுமையைப்
புறக்கணித் தால் ஒப்பிலக்கியத்தின் தனித்தன்மை கெட்டுவிடும்.”
இங்கு இன்னொரு தெளிவும் தேவை. ஏறத்தாழ சமகாலத்தைச் சேர்ந்த
பாரதியார், பாரதிதாசன் ஆகியோரை
ஒப்பிடுவது ஒப்பிலக் கியமாகாது. ஆனால் கபிலரையும் பாரதியாரையும் ஒப்பிடுவது ஒப்பிலக்கியம்
ஆகுமா? இருவருமே தமிழ்ப்பண்பாட்டைச் சேர்ந்த வர்கள்
என்று புறந்தள்ளுவதை விட, வெவ்வேறு காலப் பண்பாடு களைச் சேர்ந்தவர்கள்
என்பதால் இவர்களை ஒப்பிடுவது ஒப்பி லக்கியம் என்று
கொள்ளலாம் என்று சிலர் சொல்கின்றனர். ஆனாலும் ஒப்பிடக்கூடிய பண்பாட்டுக்கூறுகள் வெவ்வேறாக இருந்தால்
மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
ஒப்பிலக்கியம் தனிப்பட்ட ஒரு ஆய்வு முறை என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிடுவது சரியாகாது. ஒப்பிலக்கியம்
ஓர் அவியல் ஆய்வுக்களம். எந்த முறையையும் எந்த
நெறியையும் எடுத்துத் தன் நோக்கத்திற்கேற்பப் பயன்படுத்திக் கொள்ளவல்லது என்று தான்
கூறமுடியும்.
ஒப்பிலக்கியத்தின் சாத்தியக்கூறுகளை ஜி.யு. போப் சுட்டிக் காட்டியிருக்கிறார். Tamil Heroic Poems என்று அவர் தம்
நூலுக்குக் கொடுத்த தலைப்பே கைலாசபதியின்
ஒப்பியலாய்வுக்கு முன்னோடியாக அமைந்தது. பிறகு எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் என்பவர் ஹோமரின்
கதைப்பாடல்கள், புறப் பாடல்களோடு ஒப்புமை உடையன என்று
சுட்டிக்காட்டினார். 1927இல் என்.கே.
சித்தாந்தா என்பவர், Heroic Age of India என்னும் தமது நூலில், தமிழ்ப் புறப்பாடல்கள் வீரயுகப்பாடல்களைச் சேர்ந்தவை என்று
சொல்லியிருக்கிறார். இக்கருத்தை வையாபுரிப்பிள்ளையும்
தமது காவிய காலம் நூலில் ஏற்றுப் பாராட்டியிருக்கிறார்.
இவையெல்லாம் ஒப்பிலக்கியத்திற்கான சாத்தியப்பாடு பற்றிய
குறிப்புகள். தமிழில் ஒப்பிலக்கியத்துக்கு ஒரு சிறிய பாரம்பரியம்
இருக்கிறது.
ஒப்பிலக்கியத்தில் குறிப்பிடத்தக்க நல்ல பணியாற்றிய
திறனாய்வாளர்கள் சிலர் தமிழில்
உள்ளனர். முதன்முதலில் இதைத் தொடங்கிவைத்தவர் வ.வே.சு. ஐயர். அவர் தமது A Study of
Kamban’s Ramayana என்ற நூலில் உலக மகா காவிய கர்த்தாக்கள் அனைவருடனும் கம்பரை
ஒப்பிட்டு கம்பர் அவர்களையெல்லாம் விஞ்சும் உலகமகாகவி
என்பதை நிறுவியுள்ளார். வ.வே.சு. ஐயருக்குப் பின் பலநாட்டுக் கவிதைக் கொள்கைகளையும்
ஒப்பிடும் வகையில் அறிமுகப்படுத்தியவர் ரா.ஸ்ரீ.
தேசிகன். சிலகாலத்துக்குப் பிறகு இத்துறையில் முயற்சிசெய்தவர் தொ.மு.சி. ரகுநாதன். அவர் ‘பாரதியும் ஷெல்லியும்’ என்ற நூலை ஆக்கித்
தந்தார்.
இதற்குப் பிறகு பெரும்பாலும் ஒப்பிலக்கிய ஆய்வுகளில்
ஈடுபட்டவர்கள் தமிழ்ப்
பேராசிரியர்களே. தனிநாயகம் அடிகள், சங்க இலக்கியத்தை
கிரேக்க இலக்கியத்துடன்
பலசமயங்களில் ஒப்பிட்டு நோக்கி யிருக்கிறார். தமிழின் இயற்கைநெறிக் கவிதை, கிரேக்க, இலத்தீன்மொழிக்
கவிதைகளுடன் நெருங்கிய உறவுகொண்டிருப்பதை
அவர் விளக்கியுள்ளார்.
அவருக்குப் பின் இத்துறையில் முயன்றவர் வை. சச்சிதானந்தன். The
Impact of Western Thought on Bharati என்ற ஆய்வுநூல் பரந்த
கவனத்தைப் பெற்றது. மேற்கத்திய ரொமாண்டிக் கவிஞர்களும்
டென்னிசன், வால்ட் விட்மன்
போன்றவர்களும் பாரதியிடம் எத்தகைய தாக்கத்தை
ஏற்படுத்தினார்கள் என்பதை விரிவாக இந்த நூல் ஆராய்ந்தது. பின்னர் அவர் Whitman and
Bharati – A Comparative study என்ற நூலையும்
ஆக்கினார். வேதாந்த இறையியல், உலக சகோதரத்துவம்
ஆகிய நிலைகளில் இருவரையும் ஒப்பிடுகிறது அந்நூல்.
இச்சமயத்தில் ஒப்பிலக்கிய ஆய்வுக்கு உந்துசக்தியாக க.
கைலாசபதியின் Tamil Heroic Poetry என்ற
நூல் வெளிவந்தது. அவரே ஒப்பிலக்கியக் கொள்கைகளைத் தமிழில் விளக்குகின்ற ‘ஒப்பியல் இலக்கியம்’ என்ற நூலை எழுதினார். ‘அடியும் முடியும்’ என்னும்
நூலிலும் ஒப்பிலக்கியம் பற்றிய இரு கட்டுரைகள் உள்ளன. மேலும் பாரதியை தாகூருடன் ஒப்பிட்டு ‘இருமகாகவிகள்’ என்ற நூலையும் ஆக்கினார். இந்த நூலில் பாரதி, தாகூர் இருவருடைய பின்னணிகளும் ஒப்பிடப்பட்டு வெவ்வேறு நிலைகளில்
இருவரும் மலர்ந்தமைக்கான காரணங்கள் ஆராயப்படுகின்றன.
வாழ்க்கை வரலாற்று நிலையிலான ஒப்பியல் நூல் இது. ‘பாரதியும்
மேல்நாட்டுக் கவிஞர்களும்’ என்ற நூலையும் இவர்
ஆக்கியுள்ளார்.
கா. சிவத்தம்பி, கிரேக்க நாடகங்களையும் தமிழ் நாடகங்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்துள்ளார்.
கா. சிவத்தம்பி, கிரேக்க நாடகங்களையும் தமிழ் நாடகங்களையும் ஒப்பிட்டு ஆய்வுசெய்துள்ளார்.
மார்க்சிய ஆய்வாளரான பேராசிரியர் எஸ். ராமகிருஷ்ணன், கம்பனையும் மில்டனையும் விரிவாக
ஒப்பிட்டுக் ‘கம்பனும் மில்டனும்’ என்ற நூலைப்
படைத்தார். (பிறகு கம்பனும்
மில்டனும்-ஒரு புதிய பார்வை). இந்நூல் மிகச்சிறந்த
ஒப்பிலக்கிய நூலாகக் கருதப்படும் பெருமை வாய்ந்தது. கம்பராமாயணத்தையும் மில்டனின் துறக்க
நீக்கத்தையும் (பேரடைஸ் லாஸ்ட்) விரிவாக ஆராயும் நூல்
இது. இரு கவிஞர்களுக்கிடையிலும் காணப் படும் காவியக் கட்டுக்கோப்பு, பழைய காவியங்களின் செல்வாக்கு ஆகியவற்றை
முதலில் சுட்டிக்காட்டுகிறார்.
பிறகு இலட்சிய நோக்கு, நிகழ்ச்சிப்போக்கு, திருப்புமையம், சிக்கல் அவிழ்ப்பு போன்ற தலைப்புகளில்
இவ்விரு காப்பியங் களும் இணைந்து
செல்லும் முறையை அழகாக விளக்கியுள்ளார். இந்நூலில் கதைமாந்தர்களின் ஒப்பீடு மிகச்
சுவையானது. கைகேயியைக் கடவுளோடு (ஆதாமையும் ஏவாளையும்
படைத்த திருத்தந்தை) ஒப்பிடுவதும், தசரதனோடு சாம்சனை ஒப்பிடுவதும், புதுமையல்லாமல் வேறு என்ன? இராவணனைச் சாத்தானோடு ஒப்புநோக்குவது எதிர்பார்க்கக் கூடியதே.
சிலப்பதிகாரம் பற்றிய ஒப்பியல் ஆய்வுகளிலும் இவர்
ஈடுபட்டார்.
பேராசிரியர் கோ. சுந்தரமூர்த்தி வடமொழி இலக்கியக் கொள்கை
களையும் தொல்காப்பியக்
கொள்கைகளையும் ஒப்பிட்டு ஒரு அருமையான நூல் எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெ.
திருஞான சம்பந்தம் என்பவரும் வடமொழி இலக்கியக் கொள்கைகளையும்
தமிழ் இலக்கியக் கொள்கைகளையும் ஒப்பிட்டுள்ளார்.
கதிர். மகாதேவன், ஒப்பியல் நோக்கில்
சங்ககாலக் கவிஞர்களையும், கிரேக்கக் கவிஞர்களையும் ஒப்பிட்டு
ஆராய்ந்துள்ளார். ‘தமிழர் வீரப்பண்பாடு’, ‘ஒப்பிலக்கிய நோக்கில் சங்ககாலம்’, ‘தொன்மம்’ ஆகியவை
இவரது நூல்கள்.
தெ. பொ. மீனாட்சிசுந்தரனாரின் ஆய்வுமாணவரான க. செல்லப்பன், ‘ஒப்பியல் தமிழ்’, ‘எங்கெங்கு
காணினும் சக்தி’, ‘ஒப்பிலக்கியம்-கொள்கைகளும் செயல்முறைகளும்’, ‘இலக்கியத்தில் பழம்புதுமையும்
புதுப்பழமையும்’, ‘விடுதலைச் சிட்டும்
புரட்சிக்குயிலும்’ ஆகிய பத்து நூல்களை எழுதியவர். Shakespeare
and Ilango as Tragedians என்ற ஒப்பீட்டு நூலை
எழுதினார். ‘ஒப்பிலக்கிய நோக்கில் ஷேக்ஸ்பியரும்
இளங்கோவும்’ எனத் தமிழில் அது வெளிவந்தது. பல
ஒப்பியல் கட்டுரைகளையும் அவ்வப்போது
வழங்கியுள்ளார்.
தொன்மவியல் ஆய்வு பற்றியும் எழுதியுள்ளார். இவருடைய ஒப்பீட்டுக்கு ஒரு சிறுசான்று:
“வேதநாயகம் பிள்ளையின்
புதினத்தில் செழிக்கும் தமிழ் உணர்வை தேசிய உணர்வின் முன்னோடியாகக் கருதவேண்டும்.
இதைத்தவிர, தலைவி ஆணுடையில் அரசுப்பொறுப்பை
ஏற்கும்போதும் ஆனந்தமடத்தின் சாயலைக் காணலாம்….ஷேக்ஸ்பியரின் கதாநாயகிகள் போல்
ஆனந்தமடத்தின் இறுதியிலும் ஞானம் பேசப்படுகிறது.
ஆனந்தமடத்திலும், பிரதாப முதலியார்
சரித்திரத்திலும் பாசிடிவிசம், என்லைட்டன்மெண்ட் ஃபிலாச
பியின் தாக்கம் தெரிந்தாலும் பிரதாப முதலியார் சரித்திரம் அவற்றை ஓரளவு கடந்து இந்தியக் கலாச்சாரத்தை வலியுறுத்துவதுபோல் தெரிகிறது.”
பியின் தாக்கம் தெரிந்தாலும் பிரதாப முதலியார் சரித்திரம் அவற்றை ஓரளவு கடந்து இந்தியக் கலாச்சாரத்தை வலியுறுத்துவதுபோல் தெரிகிறது.”
இன்றைய கல்வித்துறைசார் ஒப்பியல் ஆய்வுக்கு வழிவகுத்தவர்களாக
எஸ். இராமகிருஷ்ணன், வை. சச்சிதானந்தன் போன்ற முந்திய தலை
முறையினருடன், க. செல்லப்பன், ப. மருதநாயகம், சிற்பி பாலசுப்பிரமணியம், பா. ஆனந்தகுமார் போன்ற இந்தத் தலைமுறையினரையும் கூறலாம்.
சிற்பி பாலசுப்பிரமணியன்,
கவிஞர்.
வானம்பாடி இயக்கத்தில் 1970இல் ஈடுபட்டவர்களில் ஒருவர். ‘வானம்பாடி’ என்னும் ‘விலையிலாக்
கவி மடலை’யும், ‘அன்னம்விடு தூது’ என்னும் பத்திரிகையையும் ஆசிரியராக
இருந்து நடத்தினார். பாரதியார்
பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். கவிதை நூல்களன்றி, மொழி பெயர்ப்புகளும் இலக்கியத்
திறனாய்வு நூல்களும் எழுதியுள்ளார்.
லலிதாம்பிகா அந்தர்ஜனம் எழுதிய ‘அக்னி சாட்சி’ என்னும் மலையாள நாவலின் மொழி பெயர்ப்புக்காக
சாகித்திய அகாதெமி பரிசு பெற்றவர். மீண்டும் இரண்டு
ஆண்டுகள் கழித்து ‘ஒரு கிராமத்து நதி’ என்னும் தமது கவிதைநூலுக்காகச் சாகித்திய அகாதெமி
பரிசு பெற்றார். ‘இலக்கியச் சிந்தனை’ என்ற விமரிசன நூலை எழுதினார், பாரதி-வள்ளத்தோள் கவிதைகளை ஒப்பீடு
செய்து (A comparative study of Bharati
and Vallathol) முனைவர் பட்டம்
பெற்றவர். அவருடைய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘சிற்பியின் கட்டுரைகள்’ என்ற நூலாக வெளிவந்துள்ளன. சிற்பியைப்
போலவே மலையாள-தமிழ்க் கவிதை ஒப்பீட்டில்
ஈடுபட்ட இன்னொருவர் சாமுவேல்தாசன்.
பாலா, ‘பாரதியும் கீட்சும்’ என்னும் தமது சிறுநூலில் இருவரையும் ஒப்பிட்டுள்ளார். பாரதி முதலில் தெய்வத்தைக் காண்கிறார், அதில் அழகைக் காண்கிறார் என்றும் கீட்ஸ், முதலில் அழகைக் காண்கிறார், பிறகு அதில் தெய்வத்தைக் காண்கிறார் என்றும் விளக்குவது சுவையானது.
பாலா, ‘பாரதியும் கீட்சும்’ என்னும் தமது சிறுநூலில் இருவரையும் ஒப்பிட்டுள்ளார். பாரதி முதலில் தெய்வத்தைக் காண்கிறார், அதில் அழகைக் காண்கிறார் என்றும் கீட்ஸ், முதலில் அழகைக் காண்கிறார், பிறகு அதில் தெய்வத்தைக் காண்கிறார் என்றும் விளக்குவது சுவையானது.
ப. மருதநாயகம், ‘கிழக்கும் மேற்கும்’, ‘திறனாய்வாளர் தெ.பொ.மீ.’ ‘மேலை நோக்கில் தமிழ்க்கவிதை’ போன்ற பத்து நூல்களைத் தமிழில்
வரைந்தவர். பல பல்கலைக்கழகங்களோடு
தொடர்புடைய ஆராய்ச்சியாளர். ‘கிழக்கும் மேற்கும்’ நூலில் தொல்காப்பியர், பாரதியார், பாரதிதாசன், அரவிந்தர், டி.எஸ். எலியட் ஆகியவர்களின் படைப்புகளை ஒப்பியல்
நோக்கில் ஆராய்ந்துள்ளார். அ. அ. மணவாளனும் ஒப்பியல்
துறையில் ஈடுபட்டுச் சில நூல்களைப் படைத்துள்ளார். அரிஸ்டாடிலின் கவிதையியலைத் தமிழில்
மொழிபெயர்த்தவர் இவர்.
ஜி. ஜான் சாமுவேல், ஆசியவியல்
நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றியவர். ‘இலக்கிய ஒப்பாய்வுக்
களங்கள்’, ‘இலக்கியத் திறனாய்வு
முதற்பகுதி’, ‘திறனாய்வுச்
சிந்தனைகள்’, ‘ஷெல்லியின்
கவிதைக்கலை’, ‘ஷெல்லியும் பாரதியும்-ஒரு புதிய பார்வை’ போன்ற பல நூல்களை எழுதி யுள்ளார்.
ஒப்பாய்வுக் களங்கள் என்ற நூல்
ஒப்பிலக்கியக் கோட்பாடுகளை முதலில் தெளிவுபடுத்தி, பிறகு
தமிழின் முக்கியமான காலகட்டங்களில்-வீரயுகம்,
அறநெறிக்காலம், பக்திக்காலம், சிற்றிலக்கியக் காலம், தற்கால ரொமாண்டிக் கவிதை இலக்கியம் போன்றவற்றின் இலக்கியங்களை எவ்வாறு
ஒப்பிடலாம் என்பதை விளக்குகிறது.
பா. ஆனந்தகுமார், காந்திகிராமப்
பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர். மலையாளம், தெலுங்கு மொழிகளில் பட்டயப்படிப்புப்
படித்தவர். ‘இந்திய ஒப்பிலக்கியம்’, ‘பாரதி-ஆசான்-அப்பாராவ் கவிதைகளில்
புனைவியல்’, ‘தெலுங்கு இலக்கிய வரலாறு’ போன்ற நூல்களின் ஆசிரியர். இவருடைய
இந்திய ஒப்பிலக்கியம் என்னும் நூலில், ஒரு சில தமிழ் இலக்கியாசிரியர்களை
வேறுசில இலக்கியாசிரியர்களோடு
ஒப்பிடும் சிறுசிறு கட்டுரைகள் அடங்கியிருக் கின்றன. இந்நூலின் முன்னுரையில் கா. சிவத்தம்பி, தமிழிலக்கியத்தின் அழகியல் என்பது தனியான ஒன்றா, அல்லது இந்திய அழகியல் கோட்பாட்டினுள்
வரக்கூடியதா என்ற கேள்வியை
எழுப்புகிறார். நமது இலக்கிய விமரிசனச் சிந்தனைகள் இத்துறையில் அதிகம் செல்லவில்லை என்பதையும் சுட்டிக்
காட்டுகிறார்.
கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி
இலக்கியங்களோடு தமிழ் இலக்கியங்களை டி. பி. சித்தலிங்கையா, டி. எஸ். சதாசிவம், மு. கு. ஜகந்நாதராஜா போன்றோர் ஒப்பிட்டுள்ளனர். பெ.சு. மணி எழுதிய ‘சங்ககால ஒளவையாரும் உலகப் பெண்பாற்புலவர்களும்’ என்ற நூலும் நோக்கத்தக்கது. இராம.
குருநாதன் ‘சங்கப்பாட்டும்
சப்பானியக் கவிதையும்’ என்ற நூலை எழுதி
யுள்ளார். ஆ. ரா. இந்திரா என்பவர்
மெய்ப்பாட்டு அடிப்படையில் கம்பரையும், ஹோமரையும் ஒப்பிட்டுள்ளார். ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஆதவன் போன்ற இக்காலப் படைப் பாளர்களையும் பிறமொழியினருடன் ஒப்பிட்டுச்
சில ஆய்வுகள் வந்துள்ளன.
பொதுவாக, ஒப்பிலக்கிய ஆய்வுகள்
ஆழமான திறனாய்வுகளாக மலரக் கூடிய வாய்ப்பு இல்லை. காரணங்கள் சில உண்டு.
ஒப்பிலக்கிய ஆய்வுக்குக் கொள்கை பலம் கிடையாது. அதாவது, ஒப்பிலக்கியத்துக்கெனத் தனிக்கொள்கை என்பது இல்லை. இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், ரொமாண்டிசிசம், புதுத்திறனாய்வு, அமைப்பியம், பின்னமைப்பியம், பின்-நவீனத்துவம் போன்றவை தனித்தனி உலகப் பார்வையையும் அது சார்ந்த இலக்கியப் பார்வையையும் கொண்டிருக்கின்றன. அப்படிப் பட்ட தனித்த கோட்பாடு எதுவும் ஒப்பிலக்கியத்திற்கு இல்லை.
ஒப்பிலக்கிய ஆய்வுக்குக் கொள்கை பலம் கிடையாது. அதாவது, ஒப்பிலக்கியத்துக்கெனத் தனிக்கொள்கை என்பது இல்லை. இன்னும் வெளிப்படையாகச் சொன்னால், ரொமாண்டிசிசம், புதுத்திறனாய்வு, அமைப்பியம், பின்னமைப்பியம், பின்-நவீனத்துவம் போன்றவை தனித்தனி உலகப் பார்வையையும் அது சார்ந்த இலக்கியப் பார்வையையும் கொண்டிருக்கின்றன. அப்படிப் பட்ட தனித்த கோட்பாடு எதுவும் ஒப்பிலக்கியத்திற்கு இல்லை.
இரண்டாவது, ஒப்பிலக்கியம்
மொழிபெயர்ப்புகளை நம்பி உள்ளடக்கத்தை மட்டுமே ஒப்பிடுகிறது. வெறும் உள்ளடக்க ஆய்வு
திறனாய்வு ஆகாது. ஒப்பிலக்கிய ஆய்வில்
உள்ள
முக்கியக் குறைபாடு இது. உருவத்தை ஒப்பிட வேண்டுமானால், அல்லது உள்ளடக்கம்-உருவம் இரண்டையும் சமஅளவில்
உள்ள அங்ககக் கட்டாக நோக்கி ஆராய வேண்டுமானால், இருமொழியிலும் சமஅளவு புலமை பெற்றவராக
இருக்கவேண்டும். ஆனால பொதுவாக ஒப்பிலக்கிய
ஆய்வுகள் மொழிபெயர்ப்புகளை நம்பியே செய்யப்படுகின்றன. எனவே அவை திறனாய்வாக மலர்தல் மிக அரிது.
மூன்று, உருவம் பற்றிய ஆய்வு
மிக அரிதாக இடம் பெற்ற போதிலும், அது உத்திகள்-உவமை-உருவகம்-நோக்குநிலை என்று
பட்டியலிடும் போக்காக அமைந்து விடுகிறது. முழுமை
நோக்கு முயற்சிகள், உருவத்துடன்
உள்ளடக்கத் தைப் பொருத்திப்
பார்க்கும் முயற்சிகள் குறைவு.
நான்கு, ஒப்பிடப்படும்
நூல்களின் இலக்கியத் தரம் பற்றி நாம் ஏதும் அறிந்துகொள்ள
முடிவதில்லை. எல்லா நூல்களும் மிகச் சிறந்த இலக்கிய நூல்களாகக் கருதியே ஆராயப்படுகின்றன.
அடுத்து, இந்நூல்களை இவற்றிற்குரிய இடத்தில் இலக்கிய வரலாற்றில் பொருத்திப்பார்க்கும் முயற்சிகள் பெரும்பாலும் இல்லை.
அடுத்து, இந்நூல்களை இவற்றிற்குரிய இடத்தில் இலக்கிய வரலாற்றில் பொருத்திப்பார்க்கும் முயற்சிகள் பெரும்பாலும் இல்லை.
ஆறு, மொழிபெயர்ப்புகளை
நம்பும்போதும் அது மூலநூலிலிருந்து நேராகச் செய்யப்பட்ட
மொழிபெயர்ப்பு என்றால் குறையில்லை. ஆனால் நாம் ஆங்கில வழியாக வரும் மொழிபெயர்ப்புகளை மட்டுமே
நம்பியிருக்கிறோம். உதாரணமாக, மராட்டி மொழிப் படைப்பு ஒன்றுக்கும் தமிழ்ப்
படைப்பு ஒன்றிற்கும் ஒப்பீடு செய்ய வேண்டுமானாலும் நாம்
மராட்டி கற்றுக்கொண்டு அதைச் செய்வதில்லை. மாறாக, மராட்டிப்
படைப்புகளின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை நம்பி ஆய்வில் ஈடுபட்டு விடுகிறோம்.
ஏழாவது, ஒப்பிலக்கியம், இலக்கியத்தின் பொதுமை என்ற அளவில்
கருத்துக் கொண்டு தனித்தன்மைகளை
மறுத்துவிடுகிறது. கம்பராமாயணத்துக்கும் வால்மீகி ராமாயணத்துக்கும் கதையில் பெருமளவு
ஒப்புமைகளும் உண்டு. கம்பர் தனியே வகுத்துக்கொண்ட
நிகழ்ச்சிகளும் உண்டு. ஆனால் கம்பரின் தனித் தன்மைகள், வெறும் நிகழ்ச்சிகள் அளவில் மட்டுமா
இருக்கின்றன? அமைப்பு, நடை,
மொழித்திறன், கற்பனை என எத்தனையோ வடிவக்கூறுகளில்
அல்லவா இருக்கிறது? இரண்டையும் ஒப்பிட
வேண்டுமானால், ஒப்பிலக்கியத்தில்
இரண் டின் யாப்புகளையும், சொல்லும் முறையையும், கற்பனை நயத்தையும் ஒப்பிட வழியுண்டா?
திறனாய்வுகளிலும் இதே குறைபாடு உண்டு. க.நா.சு. போன்றோரின் மொழிபெயர்ப்புகள் பல நேரடியாகச் செய்யப்பட்டவை அல்ல. அதேபோல, உலகக் கவிதைகளையும் அவற்றின் போக்குகளையும் அறிமுகப்படுத்த முனைந்த பிரம்மராஜனின் மொழிபெயர்ப்புகளும் ஆங்கில வாயிலாகவே செய்யப்பட்டவை. புதுப்புது இலக்கிய இயக்கங்களை அறிமுகப்படுத்த முனைந்தோரின் நிலைமையும் இதுவே. இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
திறனாய்வுகளிலும் இதே குறைபாடு உண்டு. க.நா.சு. போன்றோரின் மொழிபெயர்ப்புகள் பல நேரடியாகச் செய்யப்பட்டவை அல்ல. அதேபோல, உலகக் கவிதைகளையும் அவற்றின் போக்குகளையும் அறிமுகப்படுத்த முனைந்த பிரம்மராஜனின் மொழிபெயர்ப்புகளும் ஆங்கில வாயிலாகவே செய்யப்பட்டவை. புதுப்புது இலக்கிய இயக்கங்களை அறிமுகப்படுத்த முனைந்தோரின் நிலைமையும் இதுவே. இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
தனித்த விளக்கமுறை ஆய்வுகள், இலக்கியத்
தகவோ, வரலாற்று ரீதியான
இடமோ அறுதியிடப்படாதபோது
பயனற்றுப் போகும். இக்குறைகள் தமிழ் ஆய்வுகளில் களையப்பட வேண்டும். ஒப்பிலக்கியம்
பற்றிய பாடநூல்களையும் சிலர் எழுதினர். அவை
யாவும் குறையுடையவைகளே. எவ்வகையிலும் சிறப்பானவை அல்ல. இவற்றைப் படித்து ஒப்பிலக்கிய ஆய்வு செய்யத்
தெரிந்து கொண்டவர்கள் அநேகமாக இல்லை
என்றே
சொல்லிவிடலாம்.
மேலும் ஒப்பியல் திறனாய்வு,
தனித்தனி
இலக்கிய கர்த்தாக்களை ஒப்பிடுவது என்ற நிலையிலிருந்து
உயர்ந்து, ஒரு குறிப்பிட்ட
இலக்கிய இயக்கத்தை அல்லது சூழலை இன்னொரு
இலக்கிய இயக்கத்துடன் அல்லது சூழலுடன் ஒப்பிடுவது என்ற நிலைக்கு உயரவேண்டும். உதாரணமாக, தமிழின் புனைவியல் அல்லது கற்பனாவாத இலக்கியத்தை வங்காளிமொழியின் கற்பனாவாத
இயக்கத்துடன் ஒப்பிடவேண்டும். இம்மாதிரி
ஆய்வுகள்தான் உண்மையான பயனை நல்கும். இத்தகைய ஆய்வுகள் இன்னும் தமிழில் தோன்ற வில்லை.
ஒப்பிலக்கியம் என்ற துறை குறைபாடுடையது என்றாலும் இன்றைய
தேவையாகவும் இருக்கிறது. காலதேச
வரையறைகளை மீறி, பண்பாடுகளின் ஊடாகக்
காணப்படும் பொதுமைகளையும்
தனித்துவங்களையும் காணப் பயன் படுவது ஒப்பிலக்கியமே ஆகும். கலையின் உலகப் பொதுமையை வலியுறுத்திக்
குறுகிய மனப்பான்மையினைக் களையக் கூடியதும்
ஒப்பிலக்கியமே.
கங்கை
காண் படலம்
பரதன் கங்கையைக் காண்கின்ற படலம் எனப் பொருள்படும். இராமன்
கங்கையைச் சென்றடைந்த பகுதி முன்னர் (6)க் கங்கைப் படலம் எனப்
பெற்றது போலவே பரதன் கங்கையைக் காணும் பகுதியும் கங்கை காண்
படலம் என்றாயிற்று. இராமன் காடு செல்கிறபோது வழியில் கங்கைக் கரை
அடைகிறான் ஆதலின், கங்கைப் படலம் எனப்பெற்றது; ஆனால், பரதனோ
இராமனைக் காண வேண்டும் என்னும் காட்சி நோக்கத்தின் முனைப்பில்
கங்கையை அடைதலின் கங்கைப் படலம் என்னாது கங்கை காண் படலம்
என்றாயிற்று.
கங்கையைச் சென்றடைந்த பகுதி முன்னர் (6)க் கங்கைப் படலம் எனப்
பெற்றது போலவே பரதன் கங்கையைக் காணும் பகுதியும் கங்கை காண்
படலம் என்றாயிற்று. இராமன் காடு செல்கிறபோது வழியில் கங்கைக் கரை
அடைகிறான் ஆதலின், கங்கைப் படலம் எனப்பெற்றது; ஆனால், பரதனோ
இராமனைக் காண வேண்டும் என்னும் காட்சி நோக்கத்தின் முனைப்பில்
கங்கையை அடைதலின் கங்கைப் படலம் என்னாது கங்கை காண் படலம்
என்றாயிற்று.
பரதன் நடந்து சென்று கங்கைக் கரை அடைகிறான். சேனைகளோடு
வரும் பரதனைக் கண்டு குகன் ஐயமுற்றுக் கங்கையின் தென்கரை நின்று
தன் சேனைகளுக்குத் தயார் நிலையில் இருக்க அறைகூலிக் கட்டளை
இட்டுப் பரதனைக் காண வடகரைக்குத் தனி நாவாயில் வருகிறான்.
சுமந்திரனால் இராம சகோதரன் குகன் என்பதை அறிந்த பரதனும்
ஆர்வத்தோடு அவனை எதிர்நோக்குகிறான். பரதன் நிலை கண்டு திடுக்குற்ற
குகன் ஐயம் நீங்கி ஐயப்பட்டதற்கு அவலப்படுகிறான். பரதனைப் பாராட்டி
இராமன் உறைந்த, உறங்கிய இடங்களைக் காட்டி, இலக்குவன் செய்த
செயலையும் ‘எடுத்துச் சொல்ல, அது கேட்ட பரதன் பெரிதும் வருந்துகிறான்.
குகன் ஆணையால் நாவாய்கள் வரப் பரதனும், இளவலும், தாயரும்,
உடன்வந்தோரும், சேனைகளும் கங்கையின் தென்கரை அடைகிறார்கள்.
இடையே நாவாயில் தாய்மார்களைப் பரதன் குகனுக்கு அறிமுகப்படுத்தக்
குகன் வணங்குகிறான். தென்கரை சேர்ந்து தாயர்பல்லக்கில் வர, நடந்து
வரும் பரதனைப் பரத்துவாச முனிவர் வரவேற்கிறார் என்பதுவரை உள்ள
செய்திகள் இப்படலத்திற் கூறப்பெறுகின்றன.
வரும் பரதனைக் கண்டு குகன் ஐயமுற்றுக் கங்கையின் தென்கரை நின்று
தன் சேனைகளுக்குத் தயார் நிலையில் இருக்க அறைகூலிக் கட்டளை
இட்டுப் பரதனைக் காண வடகரைக்குத் தனி நாவாயில் வருகிறான்.
சுமந்திரனால் இராம சகோதரன் குகன் என்பதை அறிந்த பரதனும்
ஆர்வத்தோடு அவனை எதிர்நோக்குகிறான். பரதன் நிலை கண்டு திடுக்குற்ற
குகன் ஐயம் நீங்கி ஐயப்பட்டதற்கு அவலப்படுகிறான். பரதனைப் பாராட்டி
இராமன் உறைந்த, உறங்கிய இடங்களைக் காட்டி, இலக்குவன் செய்த
செயலையும் ‘எடுத்துச் சொல்ல, அது கேட்ட பரதன் பெரிதும் வருந்துகிறான்.
குகன் ஆணையால் நாவாய்கள் வரப் பரதனும், இளவலும், தாயரும்,
உடன்வந்தோரும், சேனைகளும் கங்கையின் தென்கரை அடைகிறார்கள்.
இடையே நாவாயில் தாய்மார்களைப் பரதன் குகனுக்கு அறிமுகப்படுத்தக்
குகன் வணங்குகிறான். தென்கரை சேர்ந்து தாயர்பல்லக்கில் வர, நடந்து
வரும் பரதனைப் பரத்துவாச முனிவர் வரவேற்கிறார் என்பதுவரை உள்ள
செய்திகள் இப்படலத்திற் கூறப்பெறுகின்றன.
பரதன் கங்கைக் கரை அடைதல்
பூத் தொழிலாற்
சிறப்புற்ற; பொன்னாற் செய்யப்பெற்ற வீரக்கழலை அணிந்த; ஒப்பற்றசேனையை உடையபரதன்; காவிரி நதியால் வளம்பெறும் (தமிழகத்துச்) சோழ நாட்டை ஒத்த; வயல்வளம் பொருந்திய கோசல நாட்டை விட்டு நீங்கி; தாவர சங்கமம் என்னும் தன்மையயாவையும் - நிலைத்திணை;
இயங்கு திணை என இரண்டாகப் பிரிக்கப்பெறும் எல்லாஉயிர்களும்; வருந்த; கங்கை கங்கைக் கரையை அடைந்தான்.
கங்கைக் கரை அடைந்த சேனையின் சிறப்பும் மிகுதியும்
யானைகளின்; மத நீர்ப் பெருக்காகிய அருவி; எல்லா இடங்களிலும் பாயப் பெறுதலால்; கணக்கிட முடியாத வண்டுக் கூட்டங்களுக்கெல்லாமல் (ஏனைய உயிர்களுக்கு); குடிக்கவும்; குளித்து மூழ்கவும்; உரிமையுடையதல்லாததாக ஆயிற்று
(குதிரைகளின் அடியின் மேல் எழுந்த தூசி அமரருலகத்தில் புகுந்து; அடைந்த அங்கே உள்ள
தேவர்களது; மதலைமீது படும்படி; தேவருலகு
முழுமையும் பரவியது. ஒரு தன்மையை (அனுமானிக்க முடிகிறதன்றி) மனிதராகிய (எம்மால்)
ஆராய்ந்தறிய இயலவில்லை; பெருமூச்சு விட்டு (நீரைப்)பருகியவையும்; நீரில் நீந்திக்கொண்டு
இருந்தவையும்; மண்ணில் விழுந்து புரண்டவையும்; எல்லாம் குதிரைத் தொகுதிகளே.
(வேறில்லை)
புழுதி, மேல் படர்ந்து சென்று வானுலகத்தில் தேவர்களை
முழுக்காட்டிய செய்தி நாம்அறியோம். ஆயினும், இங்கே நீரிலும் நிலத்திலும்
நின்றவை யெல்லாம் குதிரைகளே என்றதுகுதிரைப் படையின் மிகுதி
கூறியவாறு.
அந்தக் கங்கையாற்றின் நீர்ப் பெருக்கு; பால் ஒத்த வெண்மை நிறத்துடன்; தான் முன்புசென்று சேர்கின்ற; ஆரவாரம் பொருந்திய நீண்ட கடலின்கண்; சென்று
கலந்தது இல்லை; ஏன் எனில் பூமாலை பொருந்திய நீண்ட மகுடத்தை உடைய; பரதனது சேனையாகிய கடலே; உண்டு விட்டது.
பரதனது சேனைக்கடல் வழிவந்த இளைப்பினால் கங்கை நீரைப் பருகிய படியால் கங்கையில் நீரே இல்லையாகிவிட்டது; எனவே, கடலில் கங்கை கலக்கவில்லை எனஉயர்வு நவிற்சியாகக் கூறிச் சேனை மிகுதியைக் காட்டினார். ‘ஓல்’-ஒலி மிகுதி. “பாலை ஏய்நிறத்தொடு....ஓடிற்றில்லை” என உரைத்து மதநீர்ப் பெருக்கு்க் கலந்தலாலும், சேனை மிகுதிஉழக்கலாலும் கங்கையின் கங்கையின் வெண்ணிறம் மாறிக் கடலில் கலந்தது என்பாருளர். பின்னர்ச் சேனையாம் வேலையே மடுத்தது என வருதலின் அது ஒவ்வாமை
அறிக. கடலினும் சேனைமிகுதிஎன்பது கூறியதாம், யானை, குதிரை மிகுதி கூறினார்; இப்பாடலால்
காலாட்படையின் மிகுதி கூறினார் என்றலும் ஒன்று.
காட்டிடத்திற் சென்ற; இராமன்பின்னே (இராமனை நாடிச்) சென்ற; இராமன்
பின்னே (இராமனை நாடிச்)சென்ற; பரதனை; அந்த வழியிலே; தொடர்ந்து சென்றன - பின்பற்றிச் சென்ற சேனைகள்; ஆன்றவர் உணர்த்திய -பெரியோர்களால் கணக்கிட்டு உணர்த்தப்பெற்ற; அறுபதினாயிரம்;
அக்குரோணிகள் ஆகும்.
அக்குரோனி என்பது ஓர் எண்ணம். யானை இருபத்தோராயிரத்
தெண்ணூற்றெழுபது (21870), தேர்இருபத்தோராயிரத் தெண்ணூற் றெழுபது
(21870). குதிரை அறுபத்தையாயிரத்து அறுநூற்றுப் பத்து (65610), காலாள்
இலக்கத் தொன்பதினாயிரத்து முந்நூற்றைம்பது (190350) ஆக இரண்டு
இலட்சத்துப் பதினெண்ணாயிரத் தெழுநூறு கொண்டது (218700) ஓர்
அக்குரோணி. இப்படிஅறுபதினாயிரம் அக்குரோணி சேனைகள் உடன்
சென்றன என்க.
பரதன் சேனையுடன் வருதல் கண்டு குகன் ஐயுற்றுச் சீற்றமுறுதல்
அந்தச் சேனை; கங்கைக் கரையைநெருங்கிய அச்சமயத்தில் (அது கண்டு) ‘குகன் எனப் பெயரிய கூற்றின் ஆற்றலான்’ (2309); இந்தச் சேனை புறப்பட்டது; பவளம் உடைய கடலிலிருந்து நீரை முகந்து சூல் கொண்ட கரு மேகத்தை; உவமையாகப் பெற்ற கரிய திருமேனியுடைய இராமபிரானோடு; பேர் செய்வதற்காகவேயோ; எனக் கருதி; மேல் எழுந்த கோபம் உடையவனாய் தென்கரை வந்து தோன்றினான் (2313.)
பரதன் சேனையோடு வடகரை அடைந்தான். குகன் தென்கரையில் தோன்றினான். பரதனையும்சேனையையும் கண்டு ஐயப்பட்டுச் சீறுகிறான். அடுத்த செய்யுளின் முதற்கண் ‘குகன் எனப் பெயரியகூற்றின் ஆற்றலான்’ என்பதனை இங்குக் கொண்டு பொருள் முடிக்க. இதுமுதல் ஆறு பாடல்கள்
தொடர்ந்து (2313) ‘தென்கரை வந்து தோன்றினான்’ என்கின்ற இப்படலத்துப் பதினொராம்பாடலில் முடியும்.
குகன் என்ற பெயரை உடைய; யமனை ஒத்த பராக்கிரமத்தை உடைய வேடர் தலைவன்; கூட்டமாகஉள்ள வலிமை படைத்த (பரதன்) சேனையை; ஒரு தூசி போலப்பார்ப்பவனாய்; (இகழ்ச்சிச்) சிரிப்பு அதிகமாக; கண்களிலிருந்து நெருப்புத் தோன்ற; மூக்கிலிருந்து புகை வெறிவர; (கோபத்தால்) மேலேறிவளைந்த; புருவமாகிய போர்க்குரிய வில்லை உடையனானான்.
மேல் பாட்டில் ‘எடுத்த சீற்றத்தான்’ என்றார். குகனுக்கு வந்த சீற்றத்தின்மெய்ப்பாடுகளை இங்கே கூறினார். சேனை வருவதை முன்னவர் வந்த ‘துகளினால்’ பார்த்தறிந்தான்என்றலும் ஒன்று. ‘புருவப் போர்வில்’ என்றது உருவகம். புருவத்துக்கு வில் உவமை. வளைதல்தன்மையால்; போர்க்கு மேலும் வளைப்பர். அதுபோல இங்கே கோபத்தால் புருவம் மேலேறி மேலும்வளைந்தது. அதனால், ‘போர்விலான்’ என்றார். இனி அவன் சீற்றம் தொடர்வதைத்தொடர்ந்து கூறுகிறார்.
தீமை உண்டாக; இறுதிநாள்வந்த பொழுது உயிர்கள் எல்லாவற்றையும் (அவற்றின் உடலிலிருந்து) வாங்குகின்ற; கையிற் பொருந்தி முக்கிளையாகப் பிரியும் சூலத்தைஏந்தியயமனே; அழகிய; ஐந்து இலட்சம் வடிவம் எடுத்தாற் போன்ற; வலிய உடம்புடைய சேனையை உடையவன்; வில்வித்தையில் தேர்ந்தவன்.
‘இருபத்தோடு ஐந்து ஆயிரர்
உளர்’ என (1983) முன்னர்க் கூறியது,
இருபதோடு ஐந்துவைத்துப் பெருக்க நூறு ஆகும். நூறு ஆயிரவர் எனக் கூட்ட இலட்சம் ஆகும். முன்னர் உள்ள ‘ஐ
என்றஐந்தால்
முரண ‘ஐந்துலட்சம் சேனை’ என வரும். அது நோக்கி, இங்கும் ‘ஐந்நூறாயிரவர்’என்பதற்குப் பொருள் உரைத்தாம். முன்னர் உள்ள ‘ஐ’அழகு, வியப்பு என்னும் பொருள் பற்றிவந்தது. எண் பற்றி வந்ததன்று.
எண்ணாகக் கொள்ளின் முன்பாடற் றொகையோடு மாறுபடும் ஆதலின் என்க. குகனது சேனை வீரர்கள் காலனை ஒத்தவர்கள் என்று அவனது சேனைப் பெருமை கூறினார்.
முரண ‘ஐந்துலட்சம் சேனை’ என வரும். அது நோக்கி, இங்கும் ‘ஐந்நூறாயிரவர்’என்பதற்குப் பொருள் உரைத்தாம். முன்னர் உள்ள ‘ஐ’அழகு, வியப்பு என்னும் பொருள் பற்றிவந்தது. எண் பற்றி வந்ததன்று.
எண்ணாகக் கொள்ளின் முன்பாடற் றொகையோடு மாறுபடும் ஆதலின் என்க. குகனது சேனை வீரர்கள் காலனை ஒத்தவர்கள் என்று அவனது சேனைப் பெருமை கூறினார்.
(இடைக்கச்சில்)
கட்டப்பெற்றுள்ள; உடையவாளை உடையவன்; (பற்களால்) உதட்டைக்
கடித்துக் கொண்டிருப்பவன்; கடுமையாகப் பேசும் சொற்களை உடையவன்; (கண்கள்) விழித்துப் பார்க்கும் நெருப்புத் தன்மை உடையவன்; அடிக்கப் பெரும் உடுக்கையை உடையவன்; (போர்) குறித்து ஒலிக்கப் பெறும் ஊது கொம்பினை உடையவன்; ‘போர் அருகில்வந்துவிட்டது;’ என்று கருதி மகிழ்ச்சியால் மேல் எழும்பும்தோள்களை உடையவன்
கடித்துக் கொண்டிருப்பவன்; கடுமையாகப் பேசும் சொற்களை உடையவன்; (கண்கள்) விழித்துப் பார்க்கும் நெருப்புத் தன்மை உடையவன்; அடிக்கப் பெரும் உடுக்கையை உடையவன்; (போர்) குறித்து ஒலிக்கப் பெறும் ஊது கொம்பினை உடையவன்; ‘போர் அருகில்வந்துவிட்டது;’ என்று கருதி மகிழ்ச்சியால் மேல் எழும்பும்தோள்களை உடையவன்
உதட்டைப் பற்களால்
கடித்தலும், உரத்த சத்தமிட்டுக் கடுமையாகப் பேசுதலும், கண்கள்கனல் சிந்தச் சிவந்து பார்த்தலும்
கோபத்தின் மெய்ப்பாடுகளாம். போர் கிடைத்தால்வீரர்களாயிருப்பார் மகிழ்தல்
இயல்பு.
‘கிட்டியது அமர்’ என்றதால் குகனது தோள்கள்கிளர்ச்சியுற்றன எனற்ார். “போரெனில் புகலும் புனைகழல் மறவர்” (புறம் 31) என்பதும் காண்க. துடியும், கொம்பும் போர்க்காலத்து வீரர்களுக்கு உற்சாகமூட்ட
எழுப்பப்படும்வாத்தியங்களாகும். எனவே, இப்பாடலால் குகன் போருக்குச் சித்தமானான் என்பதைக்கூறினார்.
‘கிட்டியது அமர்’ என்றதால் குகனது தோள்கள்கிளர்ச்சியுற்றன எனற்ார். “போரெனில் புகலும் புனைகழல் மறவர்” (புறம் 31) என்பதும் காண்க. துடியும், கொம்பும் போர்க்காலத்து வீரர்களுக்கு உற்சாகமூட்ட
எழுப்பப்படும்வாத்தியங்களாகும். எனவே, இப்பாடலால் குகன் போருக்குச் சித்தமானான் என்பதைக்கூறினார்.
இந்தச்
(பரதன்) சேனை முழுவதும் எலிகளாகும்; யான் இந்த எலிகளைத் தின்றொழிக்கும்
பாம்பாவேன்;’ என்று வீரவார்த்தை பேசி; வலிமை நிரம்பிய; உலகினில் வாழும் -உலகத்தில் வசிக்கின்ற; வள் உகிர்ப் புலி வளவிய நகத்தை உடைய புலிகள்எல்லாம்; ஒரே இடத்தில் வந்து சேர்ந்தன என்று சொல்லும்படி உள்ள; (தனது) ஆர்ப் பொலி மிகுந்த(வேட்டுவச்) சேனையை; மகிழ்ச்சியால் (போகுக்கு) அழைத்தன.
பாம்பாவேன்;’ என்று வீரவார்த்தை பேசி; வலிமை நிரம்பிய; உலகினில் வாழும் -உலகத்தில் வசிக்கின்ற; வள் உகிர்ப் புலி வளவிய நகத்தை உடைய புலிகள்எல்லாம்; ஒரே இடத்தில் வந்து சேர்ந்தன என்று சொல்லும்படி உள்ள; (தனது) ஆர்ப் பொலி மிகுந்த(வேட்டுவச்) சேனையை; மகிழ்ச்சியால் (போகுக்கு) அழைத்தன.
‘இப்படை’ என்றது பரதன் சேனையை. படைகளை எலியாகவும், தன்னைப் பாம்பாகவும் உருவகித்தது எலிக்கு நாகம்
பகை என்பதுபற்றி. “ஒலித்தக்கால் என்னாம்
உவரி எலிப்பகை, நாகம் உயிர்ப்பக் கெடும்” (குறள் 763) என்பதனை ஈண்டு ஒப்பு நோக்குக. “அரவின் நாமத்தை எலி இருந்துஓதினால் அதற்கு, விரவும் நன்மை என்”, “புற்றில் நின்று வல் அரவினம்புறப்படப் பொருமி, இற்றது எம்வலி என விரைந்து இரிதரும் எலி”
(6238, 9325) எனக் கம்பர் பின்னும்
கூறுவர். “பைரிவி நாகத் தைவாய்ப்
பிறந்த, ஒலிப்புயிர் பெற்ற
எலிக்கணம் போல, ஒழிந்தோர் ஒழிய” என (பெருங். 1.56: 273 - 5) வருவதும் இக்கருத்தினதாதல் அறிக. நகத்துக்கு
வளமாவது கூர்மையாம். வாளுடைய
வீரரைக் கூரிய நகம் உடைய புலியாக்கினார் என்க. உருவகம், உவமையாம். ‘வலிமை நிரம்பிய உலகம் என்றது உலகில் உள்ள ஆற்றலை நோக்கி. இனி ‘வளி உலாம் உலகு’ என்பாரும் உளர்.
ஒன்று சேர்ந்து வந்த பெரிய (வேட்டுவச்) சேனை; அரிய கடையூழிக்கூாலத்தில்; இடியோடுகூடிய மேகமும்; கரிய கடலும்; மிக்குஎழுந்தார் போல; ஒன்று சேர்ந்து தன்னைச் சுற்றிவர; பக்கத்தில் உள்ள; (கங்கையாற்றின்) தெற்குக் கரையில்; வந்து
தோன்றினான்.
படைகளின் மிகுதியும், ஆரவாரம்
சூழ்தலும் பற்றி ஊழிக்காலத்து இடிமேகமும்,
பொங்குங்கடலும் சேர்ந்தது போல
என்று உவமை கூறினார். வந்து சேர்ந்தான்
என்னாது ‘தோன்றினான்’என்றது, பரதனும் அவன் சேனையில்
உள்ளாரும், பிறரும் தனது பேராற்றலும்
வீராவேசமும் காணும்படி வந்தடைந்தான்என்பதுபற்றி. வடகரையில்
பரதனும், தென்கரையில் குகனும் நின்றார்ஆதலின்‘தோன்றினான்’
என்றார்.
1.5 காப்பியங்கள்
காப்பியங்கள்
உலகிலுள்ள பல மொழிகளிலும்
படைக்கப்பட்டு உள்ளன. அவை அந்தந்த
நாட்டுப் பண்பாட்டின் அடிப்படையில் அமைந்து காணப்படுகின்றன.
அக்காப்பியங்கள்
பற்றிய செய்திகளைக் கீழே காணலாம்.
உலக
மொழிகள் பலவற்றிலும் தொன்று
தொட்டுக் காப்பியம் என்னும்
இலக்கிய வகை படைக்கப்பட்டு வந்திருக்கிறது. அவற்றுள்
சிலவற்றை காணலாம்.
இந்திய
மொழிகளிலும் பழங்காலம் முதல்
காப்பியப் படைப்புகள் தோன்றி
வந்துள்ளன. பின்வரும் இந்தியக் காப்பியங்கள் குறிப்பிடத்
தக்கவை ஆகும்.
தமிழில்
காலந்தோறும் தோன்றிய காப்பியங்களை இதிகாசம், புராணம், பெருங்காப்பியம், சிறுகாப்பியம், கதைப்பாடல்
எனத் தமிழறிஞர்கள்
வகைப்படுத்தியுள்ளனர். இருப்பினும் வடநூலார்
வடமொழியில் கவியால் எழுதப்படும் அனைத்தையும்
காவியம் என்னும் சொல்லால் குறித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இதிகாசம்
கடவுளரும்
கடவுளின் அம்சம் ஆனவர்களும்,
மானிடராகப் பிறந்து, பல
தெய்வீகச் செயல்களை ஆற்றி,
இறுதியில் தெய்வீக நிலை எய்துவதைப் பற்றி
விரிவாகப் பேசுவன இதிகாசங்கள் எனப்படும். (இதிகாசம் என்னும் சொல்லின்
பொருள் இவ்வாறு நடந்தது என்பதாம்.)
புராணம்
கடவுளர்
பற்றிய புராணங்களில் தெய்வங்கள்,
தெய்வீக நிலையில் நின்று
செயல்படுகின்றன. இத்தெய்வங்களின் அற்புதச் செயல்கள் ஒரு தலத்தைச் (இடம்) சார்ந்து அமைகின்ற போது அதைப் பற்றிக்
கூறும் கதைப்
பாடல்கள் தல புராணங்கள் என்று
பெயர் பெறுகின்றன.
காப்பியம்
சிறப்பு
மிக்க, மனிதப் பாத்திரங்கள், நல்வினை
தீவினைப் பலன்களை உலக வாழ்க்கையில் அனுபவித்து, நல்வினை
ஆற்றி, இறுதியில்
இறவா இன்பமாகிய இறைநிலை எய்துதல் பற்றி
விரிவாகச் சிறப்பித்துக் கூறுவனவே காப்பியங்கள்
எனப்படுகின்றன.
தமிழில்
காப்பியப் படைப்பு, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கியது
எனலாம். இளங்கோவடிகளின்
சிலப்பதிகாரமும், சீத்தலைச்
சாத்தனாரின் மணிமேகலையும் தமிழில் முதற் காப்பியங்களாகப் போற்றப்படுகின்றன. இவையிரண்டும் ஐம்பெருங் காப்பியங்களில்
இடம் பெற்றுள்ளன.
இளங்கோவடிகளால் இயற்றப்பட்ட
சிலப்பதிகாரம்
உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று சான்றோர்களால் பாராட்டப்படுகின்றது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு காலப் பகுதியிலும் காப்பியப் படைப்பு நிகழ்ந்த வண்ணமாகவே
இருந்திருக்கின்றது.
அவற்றுள் சில குறிப்பிடத்தக்க காப்பியங்களைச் சுட்டிக் காட்டலாம்.
இதிகாசங்களிலிருந்து ஏதேனும் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, விரிவாக்கிக்
காப்பிய வடிவில் தரும்
இலக்கியத்தை, கண்ட
காவியம்
என்று வடமொழி அறிஞர் குறிப்பிடுவர்.
அத்தகைய முயற்சி தமிழிலும் நிகழ்ந்தது. நைடதம்
(அதிவீர ராம பாண்டியர்), நளவெண்பா (புகழேந்திப்புலவர்), குசேலோபாக்கியானம் (வல்லூர்
தேவராசப் பிள்ளை), அரிச்சந்திர
புராணம் (நல்லூர் வீரைகவிராயர்) முதலியவை இந்த வகைக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும்.
இன்றுவரை
தமிழில் உருவான காப்பியங்களின் எண்ணிக்கை
ஏறத்தாழ 150 ஆகும்.
தமிழ்க்
காப்பியங்களின் அமைப்புக்கு
ஓர் எடுத்துக்காட்டாகச் சிலப்பதிகாரம் பற்றிய
செய்திகளை இங்குக்
காண்போம்.
சிலப்பதிகாரத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.
மகளிர் காலில் அணியும் அணி சிலம்பு. சிலம்பால் விளைந்த நூல் ஆதலின்
சிலப்பதிகாரம் என்றாயிற்று. கண்ணகியின் சிலம்பும், பாண்டிமாதேவியின் சிலம்பும் கதைக்கு அடிப்படையானவை. இக்காப்பியம் மூன்று
காண்டங்களையும் 30 காதைகளையும் கொண்டது.
சோழ
நாட்டில் புகார் நகரில்
பிறந்த கண்ணகி,
பாண்டி நாட்டு மதுரையை அடைந்து, கணவனை
இழந்து, சேர நாட்டில் புகுந்து தெய்வமாகியதே கதையாம். இதனைச் சமணக் காப்பியம் என்பர் அறிஞர்.
பழையன
கழிதலையும், புதியன புகுதலையும் காலந்தோறும்
தோன்றுகின்ற இலக்கியங்களில் காணலாம். அவ்வகையில், தமிழ்க்
காப்பிய வளர்ச்சிப் போக்கும் அமைந்துள்ளது. பழங்காலத்தில் சமய அடிப்படையில்
பல காப்பியங்கள்
எழுந்தன. இடைக்காலத்தில் சமயங்களை
வளர்த்த சமயச் சான்றோர் வரலாறுகளைப் பாடுவது மிகுதியாகக்
காணப்பட்டது. குறிப்பாகச் சோழர் காலத்தில்தான் மிகுதியான காப்பியங்கள் தோன்றின. அதனால் தமிழிலக்கிய வரலாற்றில் சோழர் காலத்தைக் காப்பிய இலக்கியக் காலம் என்று தமிழறிஞர்கள் கூறுவார்கள். கி.பி. 17, 18-ஆம்
நூற்றாண்டுகளில் மிகுதியும் புராண நூல்கள் எழுந்தன. சோழர் காலத்தை அடுத்தும் இக்காலத்திலும் கதைப் பாடல்கள் மிகுதியாகத்
தோன்றியுள்ளன.
இக்காலத்தில்
காப்பிய இலக்கணங்களுள்
ஒரு சிலவற்றை மட்டும் பின்பற்றி அமைக்கப்பட்ட
செய்யுள் படைப்புகள் சிறு காப்பியம்,
சிறு காவியம், குறுங்காப்பியம், குறுங்காவியம்
என்று பெயரிட்டு வழங்கப்படுகின்றன. இக்காவியங்கள்
மொழிபெயர்ப்பாகவும், தழுவல் காப்பியங்களாகவும் இருக்கின்றன. அண்மைக் காலம் வரையிலும் தோன்றிய தமிழ்க் காப்பியங்கள் கீழே
பட்டியலிட்டுத்
தரப்பட்டுள்ளன.
இக்காலக்
காப்பியத்தைப் பற்றிய விளக்கத்தை ஒரு
சான்று கொண்டு நோக்கி உணரலாம்.
பாரதியார் - பாஞ்சாலி சபதம்
பாஞ்சாலி
சபதம், பாரதக் கதையின் ஒரு
பகுதியாகத் திகழ்கின்றது. சூதில் அனைத்தையும் இழக்கின்றான் தருமன். அந்நிலையில் துச்சாதனன் திரௌபதியின் கூந்தல் பற்றி இழுத்துச் சபைக்குக்
கொண்டு வருகின்றான்.
நாணழிந்த திரௌபதி, சபையோர்
முன்னிலையில் தான் அடைந்த அவமானத்தால் ஆத்திரமடைந்து, கொடூரமான
ஒரு சபதம் செய்கின்றாள். தொடர்ந்து வீமன், அர்ச்சுனன்
முதலானோரும் சபதம் எடுக்கின்றனர். இதுவே இக்கதை பொதி பாடலின் கருவாகும்.
இக்கதைப் பாடல்
குறியீட்டு நிலையில் இந்திய விடுதலை
உணர்வைப் பிரதிபலிக்கின்றது. இக்காவியம் இரண்டு
பாகங்களையும் 5 சருக்கங்களையும் 308
பாடல்களையும் கொண்டது.
|