Wednesday, April 26, 2017

ஒரு மதிப்பெண் வினாக்கள்அலகு - 1
பக்தி இலக்கியம்
பகுதி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

1. திருமந்திரம் - திருமூலர்

1. திருமந்திரத்தின் ஆசிரியர் யார்?
அ) திருமூலர் ஆ) திருஞானசம்பந்தர் இ) வள்ளலார் ஈ) பெரியாழ்வார்
2. பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம்எத்தனையாவது திருமுறை
அ) 10 ஆ) 8 இ) 12 ஈ) 6
3. திருமந்திரம் எத்தனை இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?
அ) 7 ஆ) 6 இ) 8 ஈ) 9
4. திருவாசகத்தோடு ஒப்பு வைத்து நோக்கும் நூல்
அ) தேவாரம் ஆ) திருமந்திரம் இ) திருப்பாவை ஈ) திருவெம்பாவை
5. இறைவன் வீற்றிருக்கும் பெருங்கோயில் எது?
அ) இல்லம் ஆ) உள்ளம் இ) உடம்பு ஈ) ஆலயம்
6. மரத்தை மறைத்தது எது?
அ) யானை ஆ) சிங்கம் இ) புலி ஈ) சிறுத்தை
7. பகிர்ந்துண்ணும் பறவை எது?
அ) கழுகு ஆ) காகம் இ) குருவி ஈ) குயில்
8. மாமதயானை (இலக்கணக் குறிப்பு)
அ) உரிச்சொல் ஆ) பெயர்ச்சொல் இ) பெயரெச்சம் ஈ) உவமைத்தொகை
9. அன்பும் சிவமும் (இலக்கணக் குறிப்பு)
அ) எண்ணும்மை ஆ) உம்மைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) வினைத்தொகை2. உய்யவுலகு பெரியாழ்வார்

1. பெரியாழ்வார் பிறந்த ஊர்
அ) திருவான்மியூர் ஆ) ஸ்ரீவில்லிப்புத்தூர் இ) ஸ்ரீபெரும்புதூர் ஈ) திருமயிலை
2. பெரியாழ்வாரின் இயற்பெயர்
அ) கண்ணபிரான் ஆ) பட்டர் பிரான் இ) விஷ்ணுசித்தர் ஈ) புதுவை மன்னன
3. பெரியாழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பு
அ) திருமந்திரம் ஆ) திருவாய்மொழி இ) பெரியாழ்வார் திருமொழி ஈ) தேவாரம்
4. பெரியாழ்வார் எந்த பிரபந்த வகைக்கு முன்னோடியாக விளங்கினார்
அ) பிள்ளைத்தமிழ் ஆ) கலம்பகம் இ) உலா ஈ) தூது
5. “கோளரிஎன்பதன் பொருள்
அ) சிங்கம் ஆ) யானை இ) குதிரை  ஈ) ஆமை
6. கண்ணன் நரசிம்ம அவதாரம் எடுத்து கொன்ற அரக்கன் யார்?
அ) இரணியன் ஆ) மகாபலி இ) கம்சன் ஈ) இராவணன்
7. காளியன் என்பது
அ) சிங்கம் ஆ) வாமனன் இ) பாம்பு ஈ) ஆமை
8. நப்பினை யார்?
அ) ராதை ஆ) கோதை இ) யசோதை ஈ) சீதை
9. செங்கமலம் (இலக்கணக் குறிப்பு)
அ) வினைத்தொகை ஆ) பண்புத்தொகை இ) பெயரெச்சம் ஈ) உவமைத்தொகை
10. மாமடு (இலக்கணக் குறிப்பு)
அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல் இ) இடைச்சொல் ஈ) உரிச்சொல்


3. திருவெழுக்கூற்றிருக்கை அருணகிரிநாதர்

1. அருணகிரியார் பிறந்த ஊர் எது?
அ) சுவாமிமலை ஆ) திருவல்லிக்கேணி இ) திருச்சிராப்பள்ளி ஈ) திருவண்ணாமலை
2. திருவெழுக்கூற்றிருக்கையில் இடம்பெறும் தலம் எது?
அ) பழனிமலை ஆ) திருத்தணி இ) திருச்செந்தூர் ஈ) சுவாமிமலை
3. சந்தப்பாடல் பாடுவதில் வல்லவர் யார்?
அ) ஞானசம்பந்தர் ஆ) அருணகிரிநாதர் இ) திருமூலர் ஈ) பெரியாழ்வார்
4. அருணகிரிநாதர் எந்தக் கடவுளைப் புகழ்ந்து பாடியுள்ளார்?
அ) சிவன் ஆ) திருமால் இ) முருகன் ஈ) விநாயகர்
5. முருகப்பெருமான் தன் வேலால் தகர்த்த மலை எது?
அ) பழனிமலை ஆ) திருத்தணி இ) கிரௌஞ்சகிரி ஈ) திருவேரகம்


4. இயேசுகாவியம் - கண்ணதாசன்

1. இயேசுகாவியம் என்ற நூலின் ஆசிரியர்
அ) கண்ணதாசன் ஆ) வைரமுத்து இ) வீரமாமுனிவர் ஈ) வண்ணதாசன்
2. கண்ணதாசனின் இயற்பெயர் என்ன?
அ) முருகானந்தம் ஆ) முத்தையா இ) வண்ணதாசன் ஈ) வாணிதாசன்
3. கண்ணதாசன் நடத்திய இதழ் எது?
அ) தாமரை ஆ) தென்றல் இ) இந்தியா ஈ) மருதம்
4. முல்லை என்னும் இதழை நடத்தியவர் யார்?
அ) கண்ணதாசன் ஆ) வாணிதாசன் இ) பாரதியார் ஈ) வைரமுத்து
5. சண்டமாருதம் இதழை நடத்தியவர் யார்?
அ) கண்ணதாசன் ஆ) வைரமுத்து இ) வாணிதாசன் ஈ) வண்ணதாசன்


5. சீறாப்புராணம் - உமறுப்புலவர்

1. சீறாப்புராணம் என்ற நூலின் ஆசிரியர்
அ) கடிகைமுத்துப்புலவர் ஆ) நபிகள் நாயகம் இ) சீதக்காதி ஈ) உமறுப்புலவர்
2. ‘சீறத்என்னும் அரபுச் சொல்லின் பொருள் யாது?
அ) வரலாறு ஆ) உண்மை இ) கற்பனை ஈ) நீதி
3. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் யார்?
அ) வெங்கடேசுவர எட்டப்பபூபதி ஆ) கடிகைமுத்துப்புலவர் இ) சீதக்காதி       ஈ) அபுல்காசிம்
4. சீறாப்புராணம் எந்த சமயத்தைச் சார்ந்த நூல்
அ) சமணம் ஆ) இசுலாம் இ) பௌத்தம் ஈ) கிறித்துவம்
5. நபிகள் நாயகம் வேடனிடம் எதற்குப் பிணையாக நின்றார்?
அ) பெண்மான் ஆ) ஆண்மான் இ) குட்டிமான் ஈ) புள்ளிமான்
6. உமறுப்புலவர் பாடிய மற்றொரு நூல் எது?
அ) நொண்டிநாடகம் ஆ) முதுமொழிமாலை இ) குறவஞ்சி ஈ) சின்ன சீறா
7. சீறாப்புராணம் எத்தனைக் காண்டங்களைக் கொண்டது?
அ) 5 ஆ) 8 இ) 3 ஈ) 6
8. சீறாப்புராணத்தின் பாவகை என்ன?
அ) எண்சீர்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் ஆ) அறுசீர்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்      இ) கலிவிருத்தம் ஈ) வெண்பா


ஆ. சிற்றிலக்கியம்

6. நந்திக்கலம்பகம்

1. சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்?
அ) 90 ஆ) 92 இ) 96 ஈ) 18
2. கலம்பக உறுப்புக்கள் எத்தனை?
அ) 8 ஆ) 6 இ) 12 ஈ) 18
3. பல பூக்களால் ஆகிய மாலை
அ) மல்லிகை ஆ) கலம்பகம் இ) கனகாம்பரம் ஈ) சிற்றிலக்கியம்
4. நந்திக்கலம்பகத்தின் ஆசிரியர்
அ) பெயர் அறியப்படவில்லை ஆ) சம்பந்தர் இ) திருமூலர் ஈ) பெரியாழ்வார்
5. நந்திக்கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன்
அ) நந்திவர்மன் ஆ) சிவன் இ) திருமால் ஈ) குலோத்துங்கன்
6. “ஊசல்உறுப்பில் அமைந்த பாடல் யார் பாடுவதாக அமைந்துள்ளது
அ) மகளிர் ஆ) தலைவன் இ) தலைவி ஈ) பாங்கன்
7. மென்மலர் (இலக்கணக் குறிப்பு)
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உருவகம்
8. குறுங்கால் (இலக்கணக் குறிப்பு)
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) உவமைத்தொகை ஈ) உருவகம்
9. ஓடரிக்கண் (இலக்கணக் குறிப்பு)
அ) வினையெச்சம் ஆ) பெயரெச்சம் இ) முற்றெச்சம் ஈ) பெயர்ச்சொல்
10. கூடா மன்னர் (இலக்கணக் குறிப்பு)
அ) வினையெச்சம் ஆ) பெயரெச்சம்
இ) முற்றெச்சம் ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்


7. திருக்குற்றாலக் குறவஞ்சி

1. திருக்குற்றாலக் குறவஞ்சியை இயற்றியவர்
அ) திருமூலர் ஆ) திரிகூடராசப்பக் கவிராயர் இ) வள்ளலார் ஈ) குமரகுருபரர்
2. இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழும் அமைந்துள்ள சிற்றிலக்கியம்
அ) கலம்பகம் ஆ) குறவஞ்சி இ) பிள்ளைத்தமிழ் ஈ) தூது
3. குறவஞ்சி இலக்கியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
அ) குறவஞ்சி நாடகம் ஆ) குறவஞ்சி கூத்து இ) குறவஞ்சி பாட்டு ஈ) குறவஞ்சி சிந்து
4. திருக்குற்றாலக் குறவஞ்சியில் எந்த மலையின் வளம் குறிப்பிடப்படுகின்றது
அ) பழனிமலை ஆ) கொல்லிமலை இ) திரிகூடமலை ஈ) இமயமலை
5. வானரங்கள் எதைக் கொடுத்து மந்தியோடு கொஞ்சும்
அ) காய் ஆ) கனி இ) பூ ஈ) விதை
6. “பரிஎன்பது
அ) பசு ஆ) பன்றி இ) குதிரை ஈ) நாய்
7. “கிம்புரிஎன்பது
அ) யானை ஆ) சிங்கம் இ) மான் ஈ) புலி
8. “அம்புலிஎன்பது
அ) புலி ஆ) நிலா இ) யானை ஈ) வானம்
9. காகம் அணுகா மலை எது?
அ) பழனிமலை ஆ) கொல்லிமலை இ) திரிகூடமலை ஈ) இமயமலை
10. கைலாச மலையில் வசிப்பவன்
அ) சிவன் ஆ) திருமால் இ) முருகன் ஈ) பிரம்மன்
11. தேனருவி (இலக்கணக் குறிப்பு)
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) வினைத்தொகை
12. குறும்பலா (இலக்கணக் குறிப்பு)
அ) பண்புத்தொகை ஆ) உவமைத்தொகை இ) உம்மைத்தொகை ஈ) வினைத்தொகை


8. மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர்

1. பிள்ளைக்கவி என அழைக்கப்படுவது
அ) குறவஞ்சி ஆ) பிள்ளைத்தமிழ் இ) கலம்பகம் ஈ) பரணி
2. பிள்ளைத்தமிழின் முன்னோடி
அ) குமரகுருபரர் ஆ) பெரியாழ்வார் இ) செயங்கொண்டார் ஈ) வள்ளலார்
3. மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர்
அ) குமரகுருபரர் ஆ) பெரியாழ்வார் இ) செயங்கொண்டார் ஈ) வள்ளலார்
4. பிள்ளைத்தமிழ் எத்தனை வகைப்படும்
அ) பதினெட்டு ஆ) ஆறு இ) பத்து ஈ) இரண்டு
5. பெண்பாற் பிள்ளைத்தமிழிற்குரிய பருவங்கள் எத்தனை
அ) பதினெட்டு ஆ) ஆறு இ) பத்து ஈ) இரண்டு
6. “கௌரியர்என்போர்
அ) சேரர் ஆ) சோழர் இ) பாண்டியர் ஈ) நாயக்கர்
7. பசுங்கிளி (இலக்கணக் குறிப்பு)
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை இ) பெயரெச்சம் ஈ) வினையெச்சம்
8. மாசுணம் (இலக்கணக் குறிப்பு)
அ) பெயர்சொல் ஆ) வினைச்சொல் இ) உரிச்சொல் ஈ) வினையெச்சம்

அலகு – 2

அ - சிறுகதை

9. அடையாளங்கள் - தோப்பில் முகம்மது மீரான்

1. “அடையாளங்கள்  சிறுகதையின் ஆசிரியர்
அ) புதுமைப்பித்தன் ஆ) வெ. இறையன்பு இ) தோப்பில் முகம்மது மீரான் ஈ) கு.ப. ராஜகோபாலன்
2. தோப்பில் முகம்மது மீரானின் Crossword Award க்குப் பரிந்துரைக்கப்பட்ட நூல்
அ) அடையாளங்கள் ஆ) சாய்வு நாற்காலி இ) கடலோர கிராமத்தின் கதை ஈ) வாய்க்கால் மீன்கள்
3. அடையாளங்கள் சிறுகதையில் இடம்பெறும் மரம்
அ) மாமரம் ஆ) புளியமரம் இ) மூதாட்டிமரம் ஈ) ஆலமரம்
4. மூதாட்டி மரத்தின் மீது நின்று பார்க்கும் போது தெரியக்கூடிய மலை
அ) மகேந்திர மலை ஆ) கயிலை மலை இ) பழனிமலை ஈ) இமயமலை


10. மனிதப் பிறவியும் வேண்டுவதே வெ. இறையன்பு

1. தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் பணிபுரியும் எழுத்தாளர்
அ) புதுமைப்பித்தன் ஆ) வெ. இறையன்பு இ) தோப்பில்; முகம்மது மீரான் ஈ) நா. பார்த்தசாரதி
2. வெ. இறையன்புவின் படைப்பு
அ) சாய்வு நாற்காலி ஆ) ஏழாவது அறிவு இ) பொன்னகரம் ஈ) ஏழாவது உலகம்
3. “கணபதிபிள்ளைபாத்திரம் இடம்பெறும் சிறுகதை
அ) அடையாளங்கள் ஆ) மனிதப் பிறவியும் வேண்டுவதே இ) அர்ச்சனை ரூபாய் ஈ) வலம்புரிச் சங்கு
4. “மனிதப் பிறவியும் வேண்டுவதேசிறுகதையில் இடம்பெறும் கோவில் எது?
அ) தஞ்சை பெரிய கோவில் ஆ) மதுரை மீனாட்சியம்மன் கோவில் இ) திருச்செந்தூர் முருகன் கோவில் ஈ) பேரூர் பட்டீஸ்வரர் கோவில்
5. எமனுக்குப் பயந்து லிங்கத்தைக் கட்டிக் கொண்டிருப்பவன்
அ) மார்க்கண்டேயன் ஆ) இந்திரன் இ) இராவணன் ஈ) கும்பகர்ணன்


11. நொய்யல் - சுப்ரபாரதிமணியன்

1. திருப்பூர் பகுதியில் பெண்களுக்காகவும் குழந்தைகளுக்காகவும் குரல் கொடுத்து வரும் எழுத்தாளர் யார்?
அ) புவியரசு ஆ) சிற்பி இ) சுப்ரபாரதிமணியன் ஈ) நாஞ்சில் நாடன்
2. சுப்பரபாரதிமணியன் நடத்திவரும் இதழின் பெயர்
அ) அகல் ஆ) தென்றல் இ) கனவு ஈ) கற்பனை
3. உடம்பு முழுதும் சொறிபிடித்த விநோதப் பிராணிபோல் ஆகிவிட்டது எது?
அ) சிறுவாணி ஆ) நொய்யல் இ) ஆழியாறு ஈ) பவானியாறு
4. ராமன் கதாபாத்திரம் இடம் பெறும் சிறுகதை
அ) படிப்பு ஆ) கழிவு இ) நொய்யல் ஈ) அடையாளங்கள்
5. சுப்ரபாரதிமணியன் குடியரசுத் தலைவரிடம் பெற்ற விருது
அ) கதாவிருது ஆ) அகல்விருது இ) சிறுகதை ஆசான் ஈ) ஞானபீடவிருது


12. புதுவாத்தியார் - தனுஷ்கோடி ராமசாமி

1. புதுவாத்தியார் சிறுகதையின் ஆசிரியர்
அ) நா. பார்த்தசாரதி ஆ) தனுஷ்கோடி ராமசாமி இ) சி.ஆர். ரவீந்திரன் ஈ) மா. நடராசன்
2. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளராக இருந்தவர்
அ) நா. பார்த்தசாரதி ஆ) தனுஷ்கோடி ராமசாமி இ) சி.ஆர். ரவீந்திரன் ஈ) மா. நடராசன்
3. தனுஷ்கோடி ராமசாமி அவர்களின் முதல் சிறுகதை
அ) சிம்ம சொப்பனம் ஆ) புதுவாத்தியார் இ) தீம் தரிகட ஈ) தோழர்
4. நியூ செஞ்சுரி புத்தக நிலையம் 1900 ஆம் ஆண்;டிற்கான சிறந்த சிறுகதை எழுத்தாளர் விருது யாருக்கு வழங்கியது
அ) நா. பார்த்தசாரதி ஆ) தனுஷ்கோடி ராமசாமி இ) சி.ஆர். ரவீந்திரன் ஈ) மா. நடராசன்
5. தனுஷ்கோடி ராமசாமியின் லில்லி தேசிகமணி நினைவுப் பரிசினை வென்ற படைப்பு
அ) சிம்ம சொப்பனம் ஆ) புதுவாத்தியார் இ) தீம் தரிகட ஈ) தோழர்
6. புதுவாத்தியார் வேலைப் பார்த்த ஊர் எது?
அ) கள்ளக்கொளத்தூர் ஆ) மயிலம் இ) தஞ்சை ஈ) காட்டாங்கொளத்தூர்
7. புதுவாத்தியாருக்கு திருமண அழைப்பு விடுத்த மாணவி யார்?
அ) சுமதி ஆ) சுகந்தி இ) சுந்தரி ஈ) சுஜாதா


13. கழிவு ஆண்டாள் பிரியதர்ஷினி

1. “கழிவுசிறுகதையின் ஆசிரியர்
அ) நா. பார்த்தசாரதி ஆ) கு.பா.ரா. இ) ஆண்டாள் பிரியதர்ஷினி ஈ) தாமரை
2. ஆண்டாள் பிரியதர்ஷினியின் கவிதைகளுக்காக 2000 ஆம் ஆண்டு கிடைத்த விருது
அ) கவிச்செம்மல் ஆ) வைரமுத்து விருது இ) முத்துசாமி விருது ஈ) சிற்பி விருது
3. லில்லி தேவசிகாமணி விருது பெற்ற ஆண்டாள் பிரியதர்ஷினியின் சிறுகதை
அ) கழிவு ஆ) உண்டியல் இ) சுயம் பேசும் கிளி ஈ) தோஷம்
4. பாவலர் முத்துசாமி விருது பெற்ற ஆண்டாள் பிரியதாஷினியின் கவிதைப் படைப்பு
அ) கழிவு ஆ) உண்டியல் இ) சுயம் பேசும் கிளி ஈ) தோ~ம்
5. ஆண்டாள் பிரியதர்ஷினியின் இலக்கியச் சிந்தனை விருது பெற்ற சிறுகதை
அ) கழிவு ஆ) சுயம்; பேசும் கிளி இ) தோ~ம் ஈ) உண்டியல்
6. ஆண்டாள் பிரியதர்~pனியின் நாகப்பன் ராஜம்மாள் விருது பெற்ற கவிதைத் தொகுப்பு
அ) கழிவு ஆ) உண்டியல் இ) சுயம் பேசும் கிளி ஈ) தோ~ம்
7. காசியூர் ரங்கம்மாள் விருது பெற்ற ஆண்டாள் பிரியதர்~pனியின் நாவல்
அ) தகனம் ஆ) தகிப்பு இ) கழிவு ஈ) தோஷம்
8. நெல்லை இலக்கிய வட்டம் ஆண்டாள் பிரியதர்ஷினிக்கு வழங்கிய பட்டம்
அ) சிறுகதை ஆசான் ஆ) எழுத்துலகச் சிற்பி இ) கவிச்செம்மல் ஈ) தத்துவக்கடல்
9. ஆண்டாள் பிரியதர்ஷினிக்கு தேனி இலக்கியக் கழகம் கொடுத்த பட்டம்
அ) சிறுகதை ஆசான் ஆ) எழுத்துலகச் சிற்பி இ) கவிச்செம்மல் ஈ) தத்துவக்கடல்
10. சோமையாவின் படைப்பிற்குப் பரிசு தந்த அமைப்பு
அ) அகல் ஆ) ஆழி  இ) விளக்கு ஈ) ஆலயம்


14. படிப்பு சூர்யகாந்தன்

1. படிப்பு சிறுகதையின் ஆசிரியர்
அ) சி.ஆர். ரவீந்திரன் ஆ) சூர்யகாந்தன் இ) பிச்சமூர்த்தி ஈ) மாத்தளை சோமு
 2. சூர்யகாந்தனின் இயற்பெயர்
அ) மருதாச்சலம் ஆ) விருதாச்சலம் இ) சோமையா ஈ) அருணாச்சலம்
3. சூர்யகாந்தன் அவர்களின் கவிதைத் தொகுதி
அ) சிவப்பு நிலா ஆ) கருப்பு மலர்கள் இ) பயணங்கள் ஈ) கண்ணீர்ப் பூக்கள்
4. “தோட்டத்தில் ஒரு வீடுசிறுகதைத் தொகுதியின் ஆசிரியர்
அ) சி.ஆர். ரவீந்திரன் ஆ) சூர்யகாந்தன் இ) பிச்சமூர்த்தி ஈ) மாத்தளை சோமு
5. மயிலிறகு நிகழ்ச்சியின் மூலம் வானொலி நேயர்களுக்குப் பரிட்சியமானவர்
அ) சி.ஆர். ரவீந்திரன் ஆ) சூர்யகாந்தன் இ) பிச்சமூர்த்தி ஈ) மாத்தளை சோமு
 4. மாரி எங்கு வேலை செய்தான்
அ) தொழிற்சாலை ஆ) மருத்துவமனை இ) முனிசிபாலிட்டி ஈ) தனியார்நிறுவனம்


ஆ - குறுநாவல்
15. அதேநிலா புவியரசு

1. புவியரசின் சாகித்திய அகாமதி விருது பெற்ற நூல்
அ) கையொப்பம்   ஆ) ஆசியசோதி இ) மூன்றாம் பிறை  ஈ) பசித்த சிந்தனை
2. ‘தாஸ்தாவெஸ்கியின் கர்மசோவ் சகோதரர்கள்என்ற நாவலை தமிழில் மொழிப்பெயர்த்தவர்
அ) புவியரசு ஆ) வைரமுத்து இ) சிற்பி ஈ) அகிலன
3. அதேநிலா என்னும் குறுநாவலை இயற்றியவர்
அ) புவியரசு ஆ) வைரமுத்து இ) சிற்பி ஈ) அகிலன்
4. பாரி வாழ்ந்த மலையின் பெயர் என்ன?
அ) கபிலர் மலை ஆ) பாரிமலை இ) பறம்புமலை ஈ) கொல்லிமலை
5. வறியவர் உலகத்தின் மந்திர சொல் எது?
அ) அதியமான் ஆ) ஒரி இ) கபிலர் ஈ) பாரி
6. உலகை வளம் பெறச் செய்பவன் யார்?
அ) பாரி ஆ) மாரி இ) ஓரி ஈ) காரி
7. புலவரும் பாணரும் கூத்தரும் பிறகலைஞர்களும் ஒன்றுகூடிய ஊர் எது?
அ) பனையூர் ஆ) பழையூர் இ) பாரியூர் ஈ) பந்தலூர்
8. பாரியின் நெருங்கிய நண்பர்
அ) பரணர் ஆ) கபிலர் இ) பிசிராந்தையார் ஈ) ஒளவையார்