பகைவர் பணிவு இடம் நோக்கிஇ தகவு உடையார்
தாமேயும் நாணித் தலைச்செல்லார்;-காணாய்;
இளம் பிறை ஆயக்கால் திங்களைச் சேராதுஇ
அணங்கு அருந் துப்பின் அரா.
பிறை நிலவாக நிலவு இருக்கும் போது அதன் எதிர்களான இராகுவும் கேதுவும் அதனைப் பற்றாது விட்டுவிடும். அதைப் போல அறிவுடையவர்கள், பகைவர்களின் தளர்வுநிலை கண்டு அவர்களின் மீது இரக்கம் காட்டுவர்.
அணிகலம் ஆவது அடக்கம்; பணிவு இல் சீர்
மாத்திரை இன்றி நடக்குமேல்இ வாழும் ஊர்
கோத்திரம் கூறப்படும்.
பெரிய கடலின் குளிர்ந்த துறையை உடையவனே, வறுமையுற்றவர்களுக்குப் பணிவே அணிகலனாகும். பணிவின்றி வரம்பு கடந்து உயர்ந்து ஒழுகினால், தாம் வாழும் ஊரால் தமது குடிப்பிறப்புப் பற்றி பழிக்கப்படுவர்.
எந் நிலத்து வித்து இடினும்இ காஞ்சிரங் காழ் தெங்கு ஆகா;
தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால்இ
தன்னால்தான் ஆகும் மறுமை; வட திசையும்இ
கொன்னாளர் சாலப் பலர்.
எந்த நிலத்தில் விதைத்தாலும் எட்டி விதை தென்னை மரமாக வளராதுää எட்டி மரமாகவே வளரும். அதுபோலத் தீயகுணமுள்ளவர்கள் எங்கு வாழ்ந்தாலும் தீயவர்களாகவே இருப்பர். எமன் திசையாகிய தெற்கேயுள்ள நாட்டில் வாழ்பவர்கள் வானுலகம் அடைதலும் உண்டு. தெய்வ திசையாகிய வடக்கு திசையிலுள்ள நாட்டிலும் அறஞ்செய்யாது வீணாகக் காலம் கழித்து நரகம் சேர்பவர்களும் உண்டு. ஒருவரது மறுமைப் பேறுக்கு அவர்கள் செய்யும் செயல்களே காரணமாக அமையும். ஆவர்கள் பிறந்த ஊர் காரணமாக அமையாது.
வேம்பின் இலையுள் கனியினும்இ வாழை தன்
தீம் சுவை யாதும் திரியாதாம்; ஆங்கேஇ
இனம் தீது எனினும்இ இயல்பு உடையார் கேண்மை
மனம் தீது ஆம் பக்கம் அரிது.
வேப்ப இலைகளுக்கு இடையில் கனிந்தாலும் வாழைப் பழம் தன்னுடைய இனிய சுவையிலுருந்து மாறாது. அதைப் போலத் தாம் சேர்ந்த கூட்டம் எவ்வாறு இருப்பினும், இயற்கை அறிவுடையாரது நட்பு மனம் தீயதாக மாறுவது அரிது.
உப்பு ஈண்டு உவரி பிறத்தலால்இ தம்தம்
இனத்து அனையர் அல்லர்-எறி கடல் தண் சேர்ப்ப!-
மனத்து அனையர்இ மக்கள் என்பார்.
குளிர்ந்த கடல் துறையை உடையவனே, கடலை அடுத்து இனிய ஊற்று நீர் தோன்றுவதுண்டு. மலையை அடுத்தும் உப்பு நீர் உண்டாகும். இவற்றைப் போல பகுத்தறிவு உடையோர் தமது சார்போடு ஒத்த இயல்பை உடையவரல்லர். தத்தம் இயற்கை அறிவின் நிலையினராவர்.
பராஅரைப் புன்னை படு கடல் தண் சேர்ப்ப!
ஒராஅலும் ஒட்டலும் செய்பவோஇ நல்ல
மரூஉச் செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார்?
விராஅஅய்ச் செய்யாமை நன்று.
பருத்த புன்னை மரங்கள் நிறைந்த கடல் துறையை உடையவனே, சிறந்த நட்பினைச் செய்து எத்தகையரிடத்தும் நிலை பெற்றிருக்கும் உளப்பான்மை உடையவர்கள் நண்பரைப் பிரிதலும் பின்பு சேர்தலும் செய்யமாட்டார்கள். எவருடனும் கூடிப் பிரிதலை விட நட்புச் செய்யாமலிருப்பதே சிறந்தது.
உணர உணரும் உணர்வு உடையாரைப்
புணரஇ புணருமாம் இன்பம்; புணரின்
தெரியத் தெரியும் தெரிவு இலாதாரைப்
பிரியஇ பிரியுமாம் நோய்.
நாம் நினைப்பதைக் குறிப்பால் உணர்ந்தொழுகும் கூர்ந்த அறிவுடையாரை நட்பாகக் கொண்டால் நன்மை பயக்கும். வெளிப்படையாகச் சொன்னாலும் அவற்றை அறிந்து ஒழுகாதாரை நட்பாகக் கொள்ளாதிருந்தால் துன்பங்களும் நம்மைச் சேராது.
நிலை கலக்கிக் கீழ் இடுவானும்இ நிலையினும்
மேல்மேல் உயர்த்து நிறுப்பானும்இ தன்னைத்
தலையாகச் செய்வானும்இ தான்.
சிறந்த நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்பவனும்,
தன்னை கீழ்நிலைக்கண் தாழ்த்திக் கொள்பவனும், மென்மேலும் தன்னை மேம்படுத்திக் கொள்பவனும், தன்னை எல்லோரினும் தலைவனாக்கிக் கொள்பவனும் தானேயாவான. நம் முயற்சியாலும் முயற்சியின்மையாலுமே நம் உயர்வும் தாழ்வும் அமையும்.
கரும வரிசையால்இ கல்லாதார் பின்னும்
பெருமை உடையாரும் சேறல்இ-அரு மரபின்
ஓதம் அரற்றும் ஒலி கடல் தண் சேர்ப்ப!-
பேதைமை அன்று; அது அறிவு.
குளிர்ந்து முழங்கும் கடல் துறைவனே, அறிவுடையார் அறிவிலாரை ஒழுகுதல் அறியாமை அன்று. அது காலம், இடம் முதலியவற்றிற்கேற்ப ஒழுகும் அறிவுடைமையே ஆகும்.
தருமமும் தக்கார்க்கே செய்யாஇ ஒருநிலையே
முட்டு இன்றி மூன்றும் முடியுமேல்இ அஃது என்பஇ
‘பட்டினம் பெற்ற கலம்.’
தொழில் செய்து பொருளீட்டுதல், ஈட்டிய பொருளால் இன்பம் பெறல், தேவைப்படுவோர்க்குத் தர்மம் செய்தல் ஆகிய இம்மூன்றும் கடைசி வரை தொடர்ந்தால், அப்பேறு பட்டிணத்தை வந்தடைந்த வாணிபக் கப்பலை ஒக்கும் என்பர் அறிஞர்.
No comments:
Post a Comment