Friday, November 18, 2016

செய்திக்குறிப்பு மாதிரிகள்

                                                                                      தமிழ் மன்றத் தொடக்கவிழா


                கோயமுத்தூர் எஸ். என். ஆர். சன்ஸ் கல்லூரியின் 2016-17 ஆம் கல்வியாண்டின் தமிழ் மன்றத் தொடக்க விழா 04.08.2016 (வியாழக்கிழமை) எஸ்.என்.ஆர். கலையரங்கில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர், திரைப்பட இயக்கநர் திரு. பாரதி கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்து கொண்டு, தமிழ்மொழியின் சிறப்பு குறித்து உரையாற்றினார். அவர் பேசும்போது,  6000 ஆண்டுகளுக்கு முன்பாகத் தோன்றிய தமிழ்மொழிக்கு உலகிலுள்ள வேறு எந்த மொழிக்கும் இல்லாத தனிச்சிறப்புகள் பல உண்டு என்றும், உலகில் பிறந்த அனைவரும் அவரவர் தாய்மொழியினை மதித்துப்போற்றவேண்டும் என்றும் கூறினார். மேலும் விழாவின் சிறப்பம்சமாக மாணவர்களின் மெல்லிசை நிகழ்ச்சியும் செவ்வியல் நடனமும் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் கு. கருணாகரன் அவர்கள் தலைமை ஏற்ற இவ்விழாவினை தமிழ்த்துறைதலைவர் முனைவர் த. விஸ்வநாதன் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார். எஸ். என். ஆர். சன்ஸ் கல்லூரி மட்டுமின்றி பல கல்லூரிப் பேராசிரியர்களும் கலந்துகொண்ட இவ்விழாவில் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, கோயமுத்தூர்

மாணவர் மன்றத் தொடக்க விழா

கோவை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டின் மாணவர் மன்றத் தொடக்கவிழா கோவை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் கலையரங்கில் 23.08.2016 (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக விஜய் தொலைகாட்சி புகழ் தமிழ் பேச்சு உயிர் மூச்சுநிகழ்ச்சியின் வெற்றியாளர் மற்றும் நியூஸ் 7 தொலைகாட்சியின் தொகுப்பாளர் இரா. விஜயன்  அவர்கள் கலந்துகொண்டார். இளைஞர் மத்தியில் தமிழ் ஆர்வத்தை வெளிக்கொணரும் விதத்தில் பெரிதினும் பெரிதுகேள்என்ற தலைப்பில் உரையாற்றினார். எஸ்.என்.சன்ஸ் கல்லூரியின் முதல்வர்; மற்றும் செயலர் முனைவர் கு. கருணாகரன் அவர்கள் இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். எஸ்.என்.சன்ஸ் கல்லூரியின் கல்வி புல இயக்குநர் முனைவர் ஏ.எபினேசர் ஜெயக்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் துறைகளுக்கு இடையிலான கலை இலக்கியப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவினை மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

சினாரியோ16

கோவை, எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் மாணவர் மன்றம் வழங்கும் சினாரியோ 2016 கல்லூரிகளுக்கிடையிலான கலை நிகழ்ச்சி போட்டி 04.03.2016 வெள்ளிக்கிழமை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. விழாவின் தொடக்கவிழா எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியின் கலையரங்கிலும் பரிசளிப்பு விழா மாலை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி மைதானத்தில் வெகுவிமர்சியாக நடைபெற்றது. விழாவில் எஸ்.என்.சன்ஸ் கல்லூரியின் அறங்காவலர் திரு. ஆர். விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரியின் கல்வி புல இயக்குநர் முனைவர் ஏ.எபினேசர் ஜெயக்குமார் மற்றும் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் கு. கருணாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் தமிழகம் உள்ளிட்ட கேரளா, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஐம்பதிற்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவினை மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் ஜி.பி. இரமேஸ்குமார் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

ருச்சிரா’ – தென்னிந்திய உணவுத் திருவிழா

                        கோயமுத்தூர் எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத்துறை கோவை மக்களுக்காக  செப்டம்பர் 16 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை ருச்சிராஎன்ற முழுமையான தென்னிந்திய உணவுத்திருவிழாவினை நடத்தியது. கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்ற இத்திருவிழா எஸ்.என்.ஆர். மாணவர்களின் முழுமையான முயற்சியால் உருவாக்கப்பட்டிருந்தது.
                        இந்தியாவிலேயே தென்னிந்திய சமையலுக்கென்று ஒரு தனிச்சிறப்புண்டு. இத்தென்னிந்திய உணவுமுறையின் முந்தைய மற்றும் இன்றைய சமையலின் பல்வேறு வகையான அற்புத சுவைகளை மக்களுக்கு வழங்குவதே திருவிழாவின் நோக்கமாக அமைந்திருந்தது. இங்கு  45க்கும் மேற்பட்ட ருசியான, காரசாரமான உணவுவகைகள் வழங்கப்பட்டன.
                                                இந்த மாலைவிருந்தோடு விருந்தினர்களை மகிழ்விக்க பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் பொழுதுபோக்கு விளையாட்டுக்களும்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  மாணவர்களின் கைவண்ணத்தில், பழங்கள் மற்றும் காய்கறிகளால் உருவான சிற்பங்கள் விருந்தினர்களின் கண்களுக்கு விருந்தளித்தன.
                                                ‘ருச்சிரா’  உணவுப் பிரியர்களுக்கான இடமாக அமைந்தது. பல வண்ணமயமான உணவிற்கிடையே பல முகங்களை சந்திக்கும் ஒரு கொண்டாட்டத்தை ருச்சிராவழங்கியது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இவ்விழாவினை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி நிர்வாகம், உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.
















1 comment: