1. வெள்ளிப் பனிமலை என பாரதியார் எதனைக் குறிப்பிடுகிறார்?
அ) பொதிகை மலை ஆ) நீலகிரி
இ) மேரு மலை ஈ)
இமயமலை
2. சிங்களத் தீவு என்பது
அ) அந்தமான் ஆ)
இலங்கை
இ) கச்சத் தீவு ஈ)
இந்தோனேசியா
3. காவிபியின் வெற்றிலைக்கு பாரதியார் கூறும் பண்டமாற்றுப் பொருள்
யாது?
அ)கங்கையின் கோதுமை ஆ)தஞ்சையின் நெல்
இ)சேரத்துத் தந்தம் ஈ)மராட்டியரின் கவிதை
4.”சாதி இரண்டொழிய வேறில்லை” என்ற தமிழ்மகள்
அ)காக்கை பாடினியார் ஆ)ஆண்டாள்
இ)ஒளவை ஈ)காரைக்கால் அம்மையார்
5. காசினி - பொருள் தருக.
அ)சூரியன் ஆ)நிலவு
இ)உலகம் ஈ)கடல்
6. பாரதிதாசன் பிறந்த
ஊர் எது?
அ)சென்னை ஆ)மதுரை
இ)புதுவை ஈ)கோவை
7. பாரதிதாசன் எழுதிய நாடக நூல் எது?
அ)இருண்ட வீடு
ஆ)குடும்ப விளக்கு
இ)அழகின் சிரிப்பு
ஈ)பிசிராந்தையார்
8. பாரதிதாசனின் சாகித்திய அகாதமி விருது பெற்ற படைப்பு
அ)இருண்ட வீடு
ஆ)பாண்டியன் பரிசு
இ)அழகின் சிரிப்பு ஈ)பிசிராந்தையார்
9. அழகு என்னும் கவிதை இடம் பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு எது?
அ)அழகின் சிரிப்பு
ஆ)பிசிராந்தையார்
இ)சஞ்சீவி பர்வதத்தின் சாரல் ஈ) குடும்ப விளக்கு
10. பரிதி - பொருள் தருக.
அ) சூரியன்
ஆ) நிலவு இ) மலை
ஈ) ஆறு
11. பட்டாம்பூச்சி கவிதையின் ஆசிரியர்
அ) பாரதிதாசன் ஆ) தமிழன்பன் இ) சிற்பி ஈ) யுகபாரதி
12. சிற்பியின் முதல் கவிதைத் தொகுப்பு
அ) நிலவுப்பூ ஆ) தீவெளி இ) பட்டாம்பூச்சி ஈ) மூடுபனி
13. சாக்ரடீசின் கடைசிக் கோப்பையிலிருந்து பட்டாம்பூச்சி பெற்ற வண்ணம்
அ) பச்சை ஆ) மஞ்சள் இ) நீலம் ஈ) பழுப்பு
14. ‘அரிமாநோக்கு’ எனும் மாத இதழை நடத்தி வருபவர்
அ) சிற்பி
ஆ) தமிழன்பன் இ) யுகபாரதி ஈ) லதா
15. ஈரோடு தமிழன்பனின் எந்த தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி விருது
கிடைத்தது
அ) மனுசி ஆ) வாழும் வள்ளுவம் இ) வணக்கம் வள்ளுவ ஈ) நிலவுப்பூ
16. ‘தீவெளி’ என்ற கவிதைத் தொகுப்பில் அமைந்துள்ள கவிதை
அ) பட்டாம்பூச்சி ஆ) மனுசி இ) அழகு ஈ) அக்கினிச்சுவடு
17. ‘ஆசியசோதி’ யாருடைய படைப்பு
அ) பாரதியார் ஆ) சிற்பி இ) கவிமணி ஈ) லதா
18. ‘ஒற்றுமையே உயிர்நிலை’ என்ற கவிதை இடம்பெற்றுள்ள தொகுப்பு
அ) தீவெளி ஆ) மலரும் மாலையும் இ) ஆசியசோதி ஈ) இயற்கை
19. ‘சாதி இரண்டலால் வேறுலதோ?’- யார் கூற்றாக கவிமணி உரைக்கிறார்?
அ) பாரதியார் ஆ) ஒளவையார் இ) வள்ளுவர் ஈ) பாரதிதாசன்
20. ‘பட்டாம்பூச்சி விற்பவன்’ என்ற கவிதைத் தொகுப்பின் ஆசிரியர்
அ) சிற்பி ஆ) கவிமணி இ) நா. முத்துக்குமார் ஈ) யுகபாரதி
21. தமிழக அரசிடம் குறள்பீட பாராட்டு இதழ் பெற்ற கவிஞர்
அ) நா. முத்துக்குமார் ஆ) சிற்பி இ) யுகபாரதி ஈ) தமிழன்பன்
22.ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த யுகபாரதியின் கவிதைத் தொகுப்பு
அ) தெரு ஓவியன் ஆ) தெருவாசகம் இ) பஞ்சாரம் ஈ) நொண்டிக்காவடி
23. ‘வித்தகக்கவிஞர்’
என்று அழைக்கப்படுபவர்
அ) யுகபாரதி ஆ) பழனிபாரதி இ) பா.
விஜய் ஈ) வைரமுத்து
24. பாலைவனத்தில் ஆழ்குழாய்த் திட்டம் எதனைக் குறிக்கிறது?
அ) முயற்சி ஆ) நம்பிக்கை இ) திட்டமிடா உழைப்பு ஈ) தோல்வி
25. வைரமுத்துவின் முதல் கவிதைத் தொகுப்பு
அ) வைகறை மேகங்கள் ஆ) இதுவரை நான்
26. பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் கவிதை நூல்
அ) வைகறை மேகங்கள் ஆ) கவிராஜன் கதை
இ) இதுவரை நான் ஈ) இன்னொரு தேசியகீதம்
27. மூன்றடியில் சொல்லி முகம் மலர வைக்கும் கவிதைகளுக்குப் பெயர்
அ) புதுக்கவிதை ஆ) மரபுக்கவிதை
இ) காதல்கவிதை ஈ) ஹைக்கூ கவிதை
28. தமிழில் ஹைக்கூக் கவிதையினை முதன் முதலில் மொழிபெயர்த்தவர்
அ) பாரதியார் ஆ) சி. மணி இ) அறிவுமதி ஈ) பாஷோ
29. ஒருவருக்கு அணிகலனாவது
அ) பணிவு ஆ) அடக்கம் இ) ஒழுக்கம் ஈ) துணிவு
30. “வகையறச் சூழாது எழுதல்” யாரை உருவாக்கும்
அ) நண்பரை ஆ) பகைவரை இ)
உற்றாரை ஈ) உறவினரை
31. நாலடியார் எந்த வகை இலக்கியம்?
அ) அக இலக்கியம் ஆ)
புற இலக்கியம்
இ) நீதி இலக்கியம்
ஈ) காப்பிய இலக்கியம்
32. பாம்பினுக்குப் பகையாக எதனைக் குறிப்பிடுகிறது நாலடியார்?
அ) சூரியன்
ஆ) நிலவு இ) பூமி ஈ) சனி
33. கொடுத்து உண்ணா மாக்களை எதற்கு ஒப்பிடுகிறது நாலடியார்?
அ) எட்டி மரம்
ஆ) தென்னை இ) ஆண் பனை ஈ) பெண் பனை
34. ஏலாதியின் ஆசிரியர் யார்?
அ) கணிமேதாவியார் ஆ) கபிலர்
இ) நக்கீரர் ஈ)
முன்றுறையரையனார்
35. ஆதவன் - பொருள் தருக.
அ) சூரியன்
ஆ) நிலவு இ) தாமரை ஈ)
வானம்
36. கார் நாற்பதின் ஆசிரியர் யார்?
அ) கணிமேதாவியார் ஆ)
கபிலர்
இ) நக்கீரர்
ஈ) முன்றுறையரையனார்
37. கார் நாற்பதில் பேசப்படும் அகத்திணை எது?
அ) குறிஞ்சி
ஆ) முல்லை இ) மருதம் ஈ)
நெய்தல்;
38. ‘விவேகானந்தரும் உலக வேதமும்’ என்ற நூலின் ஆசிரியர்
அ) ரோமன் ரோலன் ஆ) கால்டுவெல் இ) பாரதியார் ஈ) ப.ஐPவானந்தம்
39. ‘இலக்கிய விமர்சனத்தில் தத்துவங்கள்’ என்ற நூலின் ஆசிரியர்
அ) சாக்ரடிஸ் ஆ)
ரோமன் ரோலன் இ) அபர்க்ரோம்பி ஈ) ஓட்ஸ்வொர்த்
40. “ஆற்றலும் விழுப்பமும் வாய்ந்த உணர்ச்சிகள் தன்னிச்சையாகக் கரை புரண்டோடுவதுதான்
கவிதை” என்றவர்
அ) ஓட்ஸ்வொர்த் ஆ)
அபர்க்ரோம்ப இ) பாரதியார் ஈ) கம்பர்
41. காப்பிய இராமனைப் பெற்ற தாய்
அ) ஆதிரை ஆ) கைகேயி
இ) கோசலை ஈ) சுமத்திரை
42. பண்பாடு என்ற சொல்லை ஊரடவரசந என்ற ஆங்கிலச் சொல்லின்
தமிழ் ஆக்கமாக அறிமுகம் செய்தவர் யார்?
அ) சோ.ந. கந்தசாமி
ஆ) அமுதன்
இ) இரசிகமணி டி.கே.சி. ஈ) ஜீவானந்தம்
44. ‘கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்’ என்று அழுத்தம்
கொடுத்துப்
பாடியவர் யார்?
அ) தாயுமானவர் ஆ) திருமூலர்
இ) சமண முனிவர்கள் ஈ) மாணிக்கவாசகர்
45. ‘நாய் கவ்வியது என்று நல்லோர் நாயைக் கவ்வுவது இல்லை’ என்னும்
உயரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் நூல் எது?
அ) ஆசாரக்கோவை ஆ)
பழமொழி நானூறு
இ) கார் நாற்பது ஈ)
நாலடியார்
46. தமிழர் பண்பாடு –
ஒரு விளக்கம் என்னும் கட்டுரையின்
ஆசிரியர் யார்?
அ) சிற்பி பாலசுப்பிரமணியம் ஆ) அமுதன்
இ) சோ.ந. கந்தசாமி
ஈ) ஜீவானந்தம்
47. ‘ஆயகலைகள்’ என்பதன் பொருள்
அ) ஆய்ந்த கலைகள் ஆ) பதிவாகிய கலைகள்
இ) அறுபது கலைகள் ஈ) அறுபத்துநான்கு கலைகள்
48. ஆயகலைகள் மொத்தம் எத்தனை
அ) 61 ஆ) 64 இ) 62 ஈ) 60
49. மொழியின் ஒலிவடிவைக் கற்றுக் கொடுப்பது
அ) அட்சர இலக்கணம்
ஆ) இலகித இலக்கணம்
இ) வியாகரணம்
ஈ) ஒலியியல்
50. மொழியின் வரிவடிவத்தைக் கற்பிப்பது
அ) அட்சர இலக்கணம்
ஆ) இலகித இலக்கணம்
இ) எழுத்திலக்கணம்
ஈ) நெடுங்கணக்கு
51. மொழியின் இலக்கணம் பற்றிய படிப்பு
அ) அட்சர இலக்கணம் ஆ) இலகித இலக்கணம்
இ) வியாகரணம் ஈ) ஆகருடணம்
52. வேணு என்பது
அ) புல்லாங்குழல்
ஆ) வீணை இ) மத்தளம் ஈ) மிருதங்கம்
53. ‘சத்தப் பிரம்மம்’
என்பது
அ) ஒலிக்கல்வி ஆ)
மொழிக்கல்வி இ) இசைக்கல்வி ஈ) ஒளிக்கல்வி
54. இரதப்பரீட்சை என்பது
அ) யோகக் கலை ஆ)
தேர் ஓட்டும் கலை
இ) அழகுக்கலை ஈ) குதிரைகள் பற்றிய ஆய்வு
55. கசப்பரீட்சை என்பது
அ) யானைகள் பற்றிய
ஆய்வு ஆ) குதிரைகள் பற்றிய ஆய்வு
இ) யாழிசைப் போட்டி
ஈ) உச்சாடனம்
56. அசுவ பரீட்சை என்பது
அ) குதிரைகள்
பற்றிய ஆய்வு இ) பசு பற்றிய ஆய்வு
இ) யானைகள் பற்றிய
ஆய்வு ஈ) அம்பு விடும் கலை
57. உலோகங்களில் ஒன்றை மற்றொன்றாக்கல்
அ) ஆகருடணம் ஆ) உச்சாடனம் இ) இரசவாதம் ஈ) கவுத்துவ வாதம்
58. எறும்பு முதலிய உயிர்கள் பேசும் மொழியறிதல்
அ) இரசவாதம் ஆ)
பைபீலவாதம்
இ) காந்தர்வ வாதம்
ஈ) கவுத்துவ வாதம்
59. விடமுண்ட கண்டன் யார்?;
அ) சிவன் ஆ) முருகன் இ) திருமால் ஈ) இந்திரன்
60. “குழலன்இ கோட்டன்இ குறும்பல்;லியத்தன்” என்று
முருகப்பெருமானைத்
துதிக்கும் நூல்
அ) ஆற்றுப்படை ஆ)
திருமுருகாற்றுப்படை
இ) கந்த புராணம் ஈ)
முருகன் அல்லது அழகு
61. ‘சகல வியாகரண பண்டிதன்’ யார்?
அ) வள்ளுவர் ஆ)
கம்பர் இ) இளங்கோவடிகள் ஈ) பாரதியார்
62. பஞ்சபாண்டவர்களில் சமையற் கலையில் சிறந்தவர்
அ) வீமன் ஆ) நகுலன்
இ) சகாதேவன் ஈ) அருச்சுனன்
63. குதிரைகள் இலக்கணம் தெரிந்தவன்
அ) வீமன் ஆ) நகுலன்
இ) சகாதேவன் ஈ) அருச்சுனன்
64. பெருங்கதைக் காவிய நாயகன்
அ) சீவகன் ஆ)
உதயணன் இ) சித்தார்த்தன் ஈ) கோவலன்
65. கோடபதி என்பது
அ) யாழ் ஆ) கோடரி
இ) மரம் ஈ) வீணை
66. நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்தவர்கள்
அ) ஆழ்வார்கள் ஆ)
இரட்டைப் புலவர்கள்
இ)தேவார மூவர் ஈ) தியாகராஜபாகவதர்
67. ஏழிசை வேந்தர் எனப் போற்றப்படுபவர்
அ) எம்.கே.தியாகராஜ
பாகவதர் ஆ) ஞானசம்பந்தர்
இ) நாவுக்கரசர் ஈ) மாணிக்கவாசகர்
68. திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியர்
அ) சிவபெருமான் ஆ)
பரஞ்சோதியார்
இ) சேக்கிழார் ஈ)
கச்சியப்ப முனிவர்
69. “கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்று பாடியவர்
அ) கவிமணி ஆ)
நாமக்கல் கவிஞர் இ) பாரதியார் ஈ) ஒளவையார்
70. ‘சிலம்புகழி நோன்பு’
என்பது
அ) சிலம்பினை நீக்கும் விழா ஆ) சிலம்பு அணியும் விழா
இ) திருமண சடங்கு ஈ)
பத்தினி வழிபாடு
71. அடிசில் என்பதன் பொருள்
அ) அரிசி ஆ) நெல்
இ) உணவு ஈ) நெய்
72. பிறை என்பது
அ) வளர்பிறை ஆ)
தேய்பிறை இ) பௌர்ணமி ஈ) திங்கள்
73. பத்தினி தெய்வ வழிபாட்டினை இலங்கைக்கு எடுத்துச்சென்ற மன்னன்
அ) சேரன்
செங்குட்டுவன் ஆ) கயவாகு மன்னன்
இ) பேகன்
ஈ) நன்னன்
74. சிலப்பதிகாரத்தை இயற்றியவர்
அ) சீத்தலைச் சாத்தனார் ஆ) திருதக்கதேவர்
இ) இளங்கோவடிகள் ஈ) ஒட்டகூத்தர்
75. கற்புநெறியின் அடையாளச் சின்னமாக போற்றப்படும் மலர்
அ) முல்லை ஆ)
குறிஞ்சி இ) மருதம் ஈ) நெய்தல்
76. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர்
அ) குறிஞ்சி ஆ)
வெட்சி இ) முல்லை ஆ) வாகை
77. ‘பூப்பலி’ என்பது
அ) பலியிடல் ஆ) மலரைப் போற்றல்
இ) பூசை செய்தல்
ஈ) தலையில் சூடுதல்
78. வெள்ளணி விழா என்பது
அ) காதணி விழா ஆ)
பிறந்தநாள் விழா
இ) சிலம்புகழி ஈ) வெள்ளிவிழா
79. கார்த்திகை விழாவிற்குரிய கடவுள்
அ) சிவன் ஆ) திருமால் இ) கண்ணன் ஈ) முருகன்
80. பொங்கல் விழாவின் பழைய வடிவம்
அ) தைநீராடல் ஆ) மார்கழி நோன்பு
இ) வெள்ளணிவிழா ஈ)
எண்ணெய் தேய்த்துக் குளித்தல்
81. நடுகல் வழிபாட்டின் இலக்கணம் கூறும் நூல்
அ) நன்னூல் ஆ) தொல்காப்பியம் இ) சிலப்பதிகாரம் ஈ) புறநானூறு
82. தில்லைச் சிற்றம்பலம் அமைந்துள்ள இடம்
அ) தஞ்சை ஆ) மதுரை இ) பழனி ஈ) சிதம்பரம்
83. திருமூலர் சமாதி அமைந்துள்ள இடம்
அ) சிதம்பரம் ஆ) பழனி இ) தஞ்சை ஈ) மதுரை
84. ஆவியர் அரசர் மரபில் வந்தவன்
அ) அதியன் ஆ) பாரி இ) பேகன் ஈ) கயவாகு
85. பழனி இடைகாலத்தில் எவ்வாறு அழைக்கப்பட்டிருந்தது
அ) பொதினி ஆ) சித்தன் வாழ்வு இ) தில்லை ஈ) நன்குடி
86. வஞ்சி மாநகரில் பத்தினியாகிய கண்ணகிக்கு கோயில் கட்டியவன்
அ) கயவாகு ஆ) பேகன் இ) சேரன் செங்குட்டுவன் ஈ) நன்னன்
87. கண்ணகிக்கு சிலை வடிக்க எந்த மலையிலிருந்து கல்
எடுத்துவரப்பட்டது
அ) இமயமலை ஆ) பொதினி மலை
இ) பொதிகை மலை ஈ) பழனி மலை
88. புதிர் எதிர் காலம் கட்டுரையின் ஆசிரியர்
அ) சூ.க. சுப்பிரமணியன் ஆ) லாஸ்வெல்
இ) சிற்பி பாலசுப்பிரமணியம் ஈ) ஆல்வின் டாஃப்ளர்
89. திகைப்பூட்டும் மாற்றங்கள் நிகழும் காலத்தை மதிப்பிட்டவர்
அ) லாஸ்வெல் ஆ) சிற்பி பாலசுப்பிரமணியன்
இ) ஆல்வின்டாஃப்ளர் ஈ)
ரிட்சி கால்டர்
90. முதற்புரட்சியாகக் குறிப்பிடப்படுவது
அ) அக்டோபர் புரட்சி ஆ) பிரெஞ்சு புரட்சி
இ) வேளாண் புரட்சி
ஈ) தொழில் புரட்சி
91. ‘மௌன யுத்தம்’ என்ற கவிதையை எழுதியவர்
அ) பா. விஜய் ஆ) யுகபாரதி இ) கவிஞர் பாலா ஈ) சிற்பி
92. வேளாண்மை யுகம் நீடித்த ஆண்டுகள்
அ) 3000 ஆ) 5000 இ) 10இ000 ஈ) 12இ000
93. மின்னணு வெடிப்பாகக் கருதப்படுவது
அ) கணிப்பொறி யுகம் ஆ) விண்வெளி ஆய்வு
இ) ஆழ்கடல் ஆய்வு
ஈ) தொழில் நுட்பம்
94. எல்லாவற்றையும் வெல்லும் புது உலகம் என்பது?
அ) கணினி யுகம் ஆ) விண்வெளி ஆய்வு
இ) உயிரியல்
தொழில்நுடபம் ஈ) ஆழ்கடல் ஆய்வு
95. ‘பிளாஸ்டிக்கிலும் உலோகத்திலும் பொருள்களைச் செய்வதுபோல்
உயிர்களைச் செய்யப்போகிறோம்’ என்றவர்
அ) லாஸ்வெல் ஆ) ர்pட்சி கால்டர்
இ) ஆல்வின் டாஃப்ளர் ஈ) ஐயன்ஸ்டீன்
96. ‘அற்புத சிந்தாமணி’
என அழைக்கப்படும் நூல்
அ) அபிதான சிந்தாமணி
ஆ) சீவக சிந்தாமணி
இ) பதார்த்தகுண சிந்தாமணி ஈ) சிலப்பதிகாரம்
97. உண்டி சுருங்குதல் ..................... அழகு
அ) பெண்டிற்கு ஆ) பண்டிக்கு இ) வயிற்றுக்கு ஈ) உடலுக்கு
98. ஒற்றைத் தலைவலிக்கு மருத்துவம் கூறிய புலவர்
அ) சீத்தலைச்
சாத்தனார் ஆ) இளங்கோவடிகள்
இ) வள்ளுவர் ஈ) திருமூலர்
99. ஒற்றைத் தலைவலிக்கான மருத்துவம் இடம் பெறும் நூல்
அ) திருக்குறள் ஆ)
திருவள்ளுவமாலை
இ) நான்மணிமாலை ஈ)
நாலடியார்
100. ஆயுளை நீட்டிக்க சித்தர்கள் உருவாக்கிய மருந்து
அ) காயகற்பம் ஆ)
யோகா இ) சித்த வைத்தியம் ஈ) மூச்சு பயிற்சி
101. போரில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு பயன்பட்ட மருந்து
அ) இலைச்சாறு ஆ)
அத்திப்பால் இ) மண் ஈ) எருக்கம் பால்
102. பேச்சுத்திறன் என்ற கட்டுரையின் ஆசிரியர் பெயர் என்ன?
அ) சோ.ந. கந்தசாமி
ஆ) பசுமைக்குமார்
இ) அமுதன் ஈ) சிற்பி பாலசுப்பிரமணியம்
103. சொல்வதைத் தெளிந்து சொல்இ வெடிப்புறப் பேசு என்று குறிப்பிட்டவர்
யார்?
அ) கவிமணி ஆ) பாரதிதாசன் இ) வாணிதாசன் ஈ) பாரதியார்
Sir pls upload tamil one Marks answer 🤓😯😯
ReplyDeletePls sirs
ReplyDeleteSir please upload answers for 1 marks sir
ReplyDeleteSir answer for 1marks
ReplyDeleteSir we need answers
ReplyDeleteAnswers
ReplyDeleteSir pls upload one mark answer sir
ReplyDeleteAnswer venum sir
ReplyDelete