Wednesday, June 29, 2016

விடுமுறை – ஆர். கோமதி


கல்லூரி வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும்
நம் வாழ்க்கையின் தேடலைத் தேடிச் செல்கின்றன..
முதல் முறை கல்லூரி வருகின்ற அனுபவம்
மனதில் இருந்து அழியாத ஓர் இன்பம்..
முதல் ஆண்டின் அனுவமும் ஆற்றலும்
நம் ஒழுக்கத்தைச் சார்ந்தது
அது நம் வாழ்வின் இறுதிவரை அழைத்துச் செல்வது
கல்லூரியில் நாம் தேர்வு எழுதுவதென்பது
மதிப்பெண்ணை நோக்கியதல்ல..
எப்பொழுது விடுமுறை வரும்
என்ற எண்ணத்தை நோக்கியே
தேர்வு முடிகின்ற நேரம்
நண்பர்களோடு பகிரப்படுகின்றன
நம் இன்பங்களும் துன்பங்களும்..
பிரிவைப் பிடித்து
விடுமுறையை நோக்கிச்
செல்கின்றோம்..
தோழிகளைப் பிரிந்து சென்றபோது
நான் வருந்தி நிற்கவில்லை..
ஏனெனில்
என்னுடைய நண்பர்கள் எப்பொழுதும்
என் துணையாக வருவார்கள் என்று..
விடுமுறை காலத்தில்
என்னால் மறக்க முடியாத சம்பவம் ஒன்று..
எனக்குத் தாயாகவும் தோழியாகவும் நிற்கும்
என் உடன்பிறந்த சகோதரியின் திருமணம்.
திருமணம் என்பது
வாழ்க்கையை நிர்ணயிப்பது..
இரு மனம் இணைந்து
ஒரு மனம் ஆவது.
என் மனதின் சந்தோசம்
எப்பொழுதும் வெளிப்படுகிறது
உற்றார் உறவினரோடு
உடன் இருக்கும்போது..
அனைத்தும் பசுமையாக இருந்தன.
எனது விடுமுறை காலங்கள் அனைத்தும்
பசுமையிலும் புன்னகையிலும்
மென்மையான இன்பமாக முடிந்தன
இன்பம் என்பது
எப்பொழுது நம் கடமைகளை
தவறாமல் செய்கின்றோமோ
அப்பொழுது மனம் நிறைவடைகின்றது.
நாம் வாழ்க்கையில் எதிர்கொள்கின்ற
ஒவ்வொரு தருணமும்
நம் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்துகின்றன.
விடுமுறையில் நான் பறவையாக இருந்தேன்.
பறவைகளின் கூட்டை மனிதன் கலைத்ததுபோல்
நம் மாணவரின் வாழ்க்கையில்
சமுதாய வலைதளங்கள்
மனதைக் கலைக்கின்றன.
ஆனால்
நாம் வாழ்க்கையில் எவ்வளவு உயரம் சென்றாலும்
நம்மைத் திரும்பி பார்க்க வைப்பது என்னவோ
நம்முடைய தனித் திறமை மட்டுமே..
ஒருவன் கவிதை எழுதுவதால்
அவன் கவிஞன் அல்ல
மற்றவர்களின் வேதனையைப் புரிந்துகொண்டு
எழுதுபவன்தான் ஒரு நல்ல கவிஞன்.
நம் கல்லூரி வாழ்க்கையில்
நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளும் இன்பமே..
இரண்டாமாண்டு கல்லூரி வாழ்க்கைத் தொடங்கும்போது
ஓர் இன்பம் தோன்றியது.
என் மனதில் என் நண்பர்கள்
விடுதி வாழ்க்கையில் நிகழும் சந்தோசங்கள்
எண்ணிக்கை இல்லாதவை
இவற்றை எல்லாம் மறந்து
நான் விடுமுறை நாட்களைக் கடந்து வரவில்லை
நான் கல்லூரிக்கு வருகின்ற வழியெல்லாம்
மரங்களைக் கண்டு வியந்துபோகவில்லை
மரங்கள் நிற்கும் அந்த மண்ணைக் கண்டு
வியந்து நிற்கிறேன்..
ஏனெனில்
மண்வாசம் வீசம் இந்த பூமியில்
செம்மையான செம்மண் இருக்கும்
என் கல்லூரி மைதானத்தைப் பார்த்து
மனதில் இன்பம் நிறைந்தன..
கவிதை எழுதுபவர்கள் அனைவரும்
கற்பனை வரிகளை எழுதுகின்றனர்
என்று நினைக்காதீர்கள்
இந்தக் கவிதை வரிகள்

அவர்களின் உண்மை அனுபவங்களே….
ஆர். கோமதி 
இரண்டாமாண்டு வணிகம் மற்றும் கணினி பயன்பாட்டியியல் துறை 
எஸ். என். ஆர். சன்ஸ் கல்லூரி.

1 comment: