Sunday, April 2, 2017

சீறாப்புராணம் - மானுக்குப் பிணை நின்ற படலம்

சீறாப்புராணம்
மானுக்குப் பிணை நின்ற படலம்
சீறாப்புராணம் : சீறா + புராணம் = சீறாப்புராணம்; ‘சீறத்’ என்னும் அரபுச் சொல்லின் திரிபே சீறா என்பது. சீறத் என்னும் அரபுச் சொல்லுக்கு வரலாறு என்பது பொருள். உலகில் தூய வாழ்க்கை நடத்திய உத்தமர் ஒருவரின் (நபிகள் நாயகம்) வரலாற்றைக் கூறும் நூலாதலால் இது சீறாப்புராணம் என வழங்கலாயிற்று. இந்நூல் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் உணர்த்தும் காப்பியமாகத் திகழ்கின்றது.
உமறுப்புலவர் : சீறாப்புராணத்தைப் பாடியவர் உமறுப்புலவர். இவரது தந்தையார் சேகு முதலியார். இராமநாதபுரத்தையடுத்த கீழைக்கரை இவர் பிறந்த ஊராகும். இவர் கடிகை முத்துப்புலவரின் சீடர். சீதக்காதி என்னும் வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர். உமறுப்புலவர் பாடிய மற்றொரு நூல் ‘முதுமொழி மாலை’ என்பதாகும்.
மானுக்குப் பிணை நின்ற படலம் : நுபுவத்துக் காண்டம் என்னும் இந்நூலின் இரண்டாவது காண்டத்தில் உள்ளது இப்படலம். நபிகள் நாயகம் வேடனிடம் சிக்கிய ஒரு பெண்மானுக்காகத் தாமே பிணையாக நின்று, அம்மானை அவனிடமிருந்து மீட்ட பெருங்கருணைத்திறத்தை இப்படலம் உணர்த்துகின்றது.
முன்னுரை :
1.முகமது நபி வனத்தில் கண்ட காட்சி:
இறைவனின் திருத்தூதராகிய முகமது நபி ஒருநாள், நகர்ப்புறத்தினை நீங்கிச் செழுமையான மேகங்களைத் தனது முடியினில் தாங்கியதும், மணமிக்க மலர் வனங்களைக் கொண்டதுமான ஒருமலையினை அடைந்தார்.
            வனங்களில் திரியும் விலங்குகளைக் கொன்று அவற்றின் தசைகளை அறுத்துக் கோலில் கட்டிப் பக்குவமாகச் சுட்டுத் தன்னந்தனியே அவற்றை உண்டு, தனது ஊனைப் பெருக்கிவரும் வேடன் ஒருவன் இவ்வாறு வேட்டையாடி உண்பதைத் தவிர வேறொரு அறிவும் அற்றவன். சிறுசிறு முத்துக்களாக வியர்வை திகழும்மேனி; ஊன் மணக்கின்ற வாய்; குத்துப்புதர்கள் போல் முடிவளர்ந்த தலை; படுகொலை வீசும் பார்வையுடைய விழிகள், அரபு மொழியில் பேசுபவன். இவ்வாறான வேடன் ஒருவன் காட்டில் பின் தொடர்ந்து சென்று, மான் ஒன்றைச் சினத்துடன் வலையில் பிடித்துக் கட்டி வைத்திருப்பதனை முகமது கண்டார்.
            முகமது நபிகள் மானைக் கண்டபின், அரும்புகளும் தளிரும்மிக்க சோலையையும் காணார்; அருவியையும் காணவில்லை. அருகில் உள்ள நிழலையும் நோக்கார்; தம் மீது ஈச்சங்காயங்கள் மழை போலச் சொரிவதையும் நோக்காராகி மானையே நோக்கிச் சென்றார்.
2. நபிகளிடம் பெண்மான் முறையிடல் :
வளம் நிறைந்த அக்காட்டில் தன்னருகே வந்து நின்ற நபியை நோக்கி, தனது குட்டையான வாலை அசைத்து, நெடுங்கழுத்தை நீட்டிக் கறையற்ற நிலவு போன்றவரே! வள்ளல் முகமதே! என விளித்துப் போற்றித் தடையின்றி எவர்க்கும் கேட்கும்படியாக, வணங்கிச் சலாமிட்டுப் பின் கூறலாயிற்று :
            “வல்லவனாகிய இறைவனது உண்மைத் தூதரே! விரைந்து எனது சொற்களை உகந்து கேட்டு உமது அருளைத் தருவீராக!” எங்களுக்கு ஒரு இளங்கன்று வேண்டுமென ஆசைப்பட்டு நானும் என் கலைமானும் இருக்க, நான் சூலுறாததால் வருத்தமுற்றோம். அப்போது முகமதாகிய உங்கள் பெயரைப் போற்றினேன். எனக்கு இளஞ்சூல் உருவாகிக் கரு வளர்ந்தது.”
            யானும் எனது துணையும் சேர்ந்து ஒன்றானாற் போன்ற உருவோடு ஓர் இளங்கன்று பிறந்தது. இன்பக்கடலில் ஆழ்ந்து இம்மலையிடத்தைச் சார்ந்து துன்பம் அகன்றிருந்தேன். ஆனால் என் முன்வினையினை நான் அறியவில்லை. எனது உயிரனைய கன்றும் ஆண்மானும் யானும் எங்கள் சுற்றமும் மலைச்சாரலில் ஓரிடத்தில் வயிராறத் தழையுண்டு, பசி தீர்ந்து பின் நீர் அருந்தி எள்ளளவு அச்சமும் இன்றி நின்று உலவிய நேரம்! நாங்கள் நின்றிருந்த திசையின் எதிரிலிருந்து ஒரு மலைக்குவட்டின்கண், மத்த யானையும் அஞ்சி இறக்கச் செய்யும் தன்மையுடன் கொடூரமாக இடிமுழக்கம் போன்று நீண்டதாக ஒரு வரிப்புலியின் முழக்கம் கேட்டது. அதைக் கேட்டு நாங்கள் ஒவ்வொரு திசையிலும் தனித்தனியாகச் சிதறி ஓடினோம்.
            தாண்டிச் சென்ற செடிகளும் புதர்களும் நிலத்தில் அழுந்த ஒன்றையொன்று சென்ற திசை காணாமல் நாங்கள் ஓடினோம். நானும் எனது கன்றைக் காணாது வாடிய மனத்தோடும் உடம்பானது ஆடிக்காற்றில் துரும்புபோல் ஆட வேறோர் கானகம் புகுந்தேன். அக்காட்டினை அடைந்தபோது, அங்கு மறைந்திருந்த இவ்வேடன், வலையைச் சுற்றி எனக்கு சுருக்குஇட்டு, புலி வாயிலிருந்து தப்பிச் சிங்கத்தினிடம் சிக்கினாற்போல, நான் உடலுயிர்பதைக்கத் தேம்பி மனமிழந்து ஒடுங்கி நின்றேன்.
3. மானின் மனநிலை :
            நான் பிடிபடுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தான் பிறந்தது என் கன்று; இன்னும் புல்லை மேய்ந்தறியாது; நீரும் பருகாது; என் மடியிற் சுரந்த பாலும் வழிந்தது. என் கன்று பூமியில் கிடந்து என்ன பாடுபடுகின்றதோ? அறியேன். எனது கன்று தனது தந்தையாகிய கலைமானிடமாயினும் சோ்ந்ததோ?அல்லது வேறொரு புறமாக ஓடிச் சென்றதோ, தன் இனத்தைச் சேர்ந்து பெற்றோருக்காக ஏங்கியதோ? அல்லது புலியின் வாயில் அடிபட்டு இறந்ததோ? என்னைத் தேடி இங்குமங்குமாக ஓடி மறுகிற்றோ? அறியேனே.
            என்றும் நிலைபெற்ற கலிமா என்னும் இஸ்லாத்தின் மூலமந்திரத்தின் வாயிலாக மாந்தர் எவரும் சொர்க்கத்தில் புகச்செய்யும் புண்ணியனே! நான் இவ்வேடனின் பசியைத் தீர்க்கச் சித்தமாக உள்ளேன். அதற்கு முன் என் கால்களைப் பிணித்துள்ள பிணைப்பை நீக்கி என்னைத் தாங்கள் பிணையாக நின்று விடுவித்தல் வேண்டும். என்னைத் தாங்கள் விடுவித்தால், என்னுடைய கலை மானைச் சேர்ந்து, அதன் கவலையை மாற்றி எனது நிலையை என் இனத்திற்குத் தெரிவித்து எனது கன்றினுக்கு இனிய தீம்பால் ஊட்டி, எனது குலத்தோடு சேர்ந்து இருந்து விட்டுச் சில நாழிகைப் போதில் திரும்புவேன் என்று அப்பெண்மான் நபியிடம் குறையிரந்தது.
4. மானுக்குப் பிணையாக நபிகள் நாயகம் நிற்றல் :
            மான் இவ்வாறு உரைக்க்க் கேட்ட நபி, மனத்தில் கருணை பொங்க, வேடனை நோக்கி, “இந்த மான் தனது கன்றின் துயர் தீர்த்து வரும்வரை நான், இதற்கு பிணை; எனவே இதனை விடுக” என்றார். என்னைப் பிணையாகக் கொண்ட இந்தப் பெண்மான்  ஒரு நாழிகைப் போதில் வராவிட்டால், நான் உனது பசியைத் தீர்ப்பதற்காக ஒன்றிற்கு இரண்டாக அன்புடன் தருவேன்! கவலைப் படாதே! என்று இனிமையுடன் நபிகள் உரைத்தார்.
5.வேடனின் செயலை மான் தன் கூட்டத்திற்கு உரைத்தல்         
ஒரு வனப் பகுதியினிடத்து எண்ணற்ற பெண்மானும் கன்றும் கலையுடன் இருக்க அக்கூட்டத்தை இனிதே கண்டது – அப்பெண்மான். தன் இனத்தினுள் சென்று சேர்ந்து கவலை நீங்கியது. தனது கலையின் வருத்தத்தையும் போக்கித் தனது கன்றுக்குப் பாலூட்டி, மென்மையான முதுகையும் வாலினையும் நாவினால் நக்கிக் கொடுத்துக் கழுத்தை வளைத்து மோந்து அதன் வேட்கையையும் போக்கியது.
            கன்றிற்கு அமுதம் ஊட்டிய பின்னர்க் காட்டகத்தில் ஓடிச் சென்று, தனது இனத்திற்கெல்லாம் தான் வேடன் கைப்பட்ட வரலாறும், நபிகள் அதை மீட்டுவர விட்டதும் எடுத்துரைத்தது. பிணையாக நபிகள் இருந்தனர் என்ற மொழியைக் கேட்டுப் பிணைக்குலம் அனைத்தும் உள்ளப் பதைப்படைந்து துன்பம் எய்தின. துணையாகிய ஆண்மானும் உடல் சோர்ந்து பெருமூச்சு எய்தி நின்றது. பின்னர் அங்குப் போக வேண்டாம் எனக்கூறியது. தம்மோடு மாறுபட்டவர் கையிலிருந்தும் தப்பி வந்த மானானது, அவரால் தாம் கொல்லப்படுதலை விரும்பி மீண்டும் அத்தகைய மனிதர்கள் கையில் சேர்வதுண்டோ? மறுத்துச் சொல்லாதே. இக்குட்டியை வெறுத்தும் நம் இனத்தைத் துறந்தும் முடிவினை நோக்கிப் போக வேண்டாம் என்னும் முறையினை எடுத்துக் கூறியது.
6. பெண்மான் எடுத்த முடிவு :
            வலையில் அகப்படுத்திக் கயிறுகளால் பிணைத்து என்னைப் பற்றிய வேடனுக்கும் ஏற்பப்பேசி, தானே பிணையாக நின்றார். பெரியவன் தூதராகிய நபிகள், இவ்வுலகத்தில் எல்லா உயிர்களையும் அணைத்துக் காப்பதற்கு அவரல்லது வேறு ஒருவர் இல்லையல்லவா? எனது உயிரை வேடனது பசிக்காக ஈந்து, நபியினது பிணையை மீட்க நானம் மனம் கொள்ளவில்லையென்றால், நான் சொர்க்கத்தையிழந்து தீ நரகினில் புகுவதேயின்றி எனக்கு வேறு கதியும் பெருமையும் உண்டோ? சிறப்புமிக்க ஆண்டகை நபியின் முன்னர்ச் சொன்ன சொல்லை மாற்றிவிட்டு மறந்திருந்தால் நான் வரிப்புலி வாய்ப்பட்டு இறப்பதே கதியாகும். வேறு இருப்பதற்கு இடமும் உண்டோ? எனவே வாழ்வதற்கு எழும் விருப்பத்தினைக் கைவிடல் வேண்டும்.
7.வேடனின் மனமாற்றம்
மானும் அதன் கன்றும் சேர்ந்து வருவதனை நபிகள் பெருமான் கண்டு மகிழ்ந்து அன்போடு இருள் கொண்ட மனத்தானாகிய வேடனைக் கூவியழைத்து, ஒரு பிணைக்கு இரண்டாக உன்னிடம் வருகின்றன பார் என்றுரைத்தார்.
            அதனைக் கேட்டு வேடன் வியப்பாக நோக்கும்போது, முன் வந்த மானும் அதன் கன்றும் நபிகள் பாதத்தில் பணிந்தன. பின்னர் பெண்மானானது வணக்கம் கூறிப் பாவி எனக்காக வேட்டுவனுக்குத் தங்களையே பிணையாக்கினீர்! இப்போது மீட்டருள வேண்டும் என்றது. இவ்வாறு பக்கத்தில் வந்து பெண்மான் கூற, முகம்மது நபி வேடனை அருகில் அழைத்து அவற்றின் பண்பினைச் சுட்டிக்காட்டி, நீ நம்முடைய பிணையை விட்டுவிட்டு, தனது பசியினைத் தீர்த்துக் கொண்டு பெருநகரினை அடைக! என்றார். வேடனும் தான் வீடு பெற்றேன்; வாழ்ந்தேன் என்று அவர் பாதத்தில் வீழ்ந்தான். பின்னர் அவ்வேடன் பிணையை நோக்கி உன்னால் மனித வாழ்வில் பெறக்கூடிய உயர்ந்த கதியினைப் பெற்றேன். பிறவி நோயைக் களைந்தேன். மாறாத கொலைப்பாவத்தை விளைத்து, முன்பு நான் செய்த வேட்டுவத் தொழிலைத் தவிர்த்தேன். நீயும் மனம் மறுகுதலை விட்டுக் கன்றோடு உந்தன் கலைமானிடத்தே சென்று நல்லொழுக்கப்படி வாழ்வாயாக என்றான்.
முடிவுரை :

வானகம் வணங்குகின்ற தலைவராகிய முகம்மதுவும் மானை நோக்கி, நீ உன் காட்டுக்குச் செல்வாயாக என்றார். உடனே அந்தமானும் அவருடைய மென்மையான தாமரைப் பாதங்களை வணங்கி, தீனிலைக்கு உரியவனாக மாறிய வேடனையும் திருத்தமுறப் போற்றி, நானிலத்தாரும் அதன் பெருமை பேசும்படி நிலத்தில் நடந்து தன் கூட்டத்தைச் சென்றடைந்தது. 

55 comments:

  1. Sir can you please upload one marks? Thank you.

    ReplyDelete
  2. Very very useful for you Tamil works.., thanks for your team work

    ReplyDelete
  3. Amazing... It's very useful for exam preparation....

    ReplyDelete
  4. Nice peice of writing. Appreciatable 😃

    ReplyDelete
  5. Really it's very useful for the preparation ..tq

    ReplyDelete
  6. அருமை மிகவும் நன்றி

    ReplyDelete
  7. அருமை மிகவும் நன்றி

    ReplyDelete
  8. To sm fr ur wrk sir. ItllI vrry useful fr us fr our xam preparation. Keep moving air. Gus job.

    ReplyDelete
  9. It's useful our exams sir good work sir and thank you

    ReplyDelete
  10. அருமையான பதிவு

    ReplyDelete
  11. Replies
    1. தமிழோட அருமை தெரியாத நீங்களாம் தமிழனு சொல்லாதிங்க😠😠😠😠😠😠😠

      Delete
  12. It was very useful !!!thank you

    ReplyDelete
  13. I'm clg first year. Tomorrow tamil semester exam, it was very useful.....

    ReplyDelete
  14. Sir this is very helpful for my tamil seminar thank you sir

    ReplyDelete
  15. தசைக் கட்டியைப் பெண்ணுருவமைத்த படலம்

    ReplyDelete
  16. 👍👍👌👌👌 super

    ReplyDelete
  17. நன்றிகள் பல🙏🙏

    ReplyDelete
  18. It's really awesome 😊 thank you

    ReplyDelete
  19. It is Very Useful for me thanks
    Nice

    ReplyDelete
  20. Konjam chinnatha eluthiruntha nalla irukkum. Exam la ivlo perusa elutha mutiyala

    ReplyDelete
  21. 😉🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪🔪

    ReplyDelete
  22. பாடலின் பாடல் மற்றும் பொருள் கூறும்

    ReplyDelete